தமிழ்நாடு

"கெரோனா இன்னும் முடியவில்லை.. விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது கடும் நடவடிக்கை": அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"கெரோனா இன்னும் முடியவில்லை.. விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது கடும் நடவடிக்கை": அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நலவாழ்வு மைய கூட்டரங்கில் மாநில அளவிலான தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக அரசுக்கு 9 கோடி மதிப்பிலான 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போது மருத்துவத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவைகள் பெருமளவில் தேவைப்பட்டது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பல்வேறு அமைப்புகள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகின்றனர். இன்றும் பூமி என்கிற தன்னார்வ அமைப்பு 1,000 செறிவூட்டிகளை வழங்கி உள்ளது.

சென்னையில் டெங்கு பாதித்தவர்கள் நலமுடன் உள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. நாளை மதியம் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளேன். அப்போது, தடுப்பூசியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும், எச்.எல்.எல் தடுப்பூசி மையத்தை திறக்க உடனடி நடவடிக்கை, எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து வலியுறுத்தப்படும்.

நீட் தேர்வு தொடர்பாக, நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவினர் 86 ஆயிரம் பேரின் கருத்துக்களை கேட்டறிந்து முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். எனவே இது தொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்.

"கெரோனா இன்னும் முடியவில்லை.. விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது கடும் நடவடிக்கை": அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Kalaignar TV

கொரோனா இறப்பு குறித்து மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. அதேபோல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கும்போது, அரசியல் கட்சிகளும் அதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஏற்கனவே கடந்த தேர்தலின் போது தான் கொரோனா இரண்டாவவது அலை அதிகமாக பரவியது என்று குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே அதை கருத்தில் கொண்டு மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்படக் கூடாது.

வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்களில் விதியை மீறி கூடுதல் குளிர்சாதன வசதியை பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மூலமாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவை அனைத்துமே மூன்றாம் அலை நுழையாமல் எடுக்கப்படும் நடவடிக்கையே பொதுமக்களும் இதில் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories