தமிழ்நாடு

அறிவுரை சொன்ன முதல்வர்.. 45 நாளில் 14 கோடி நிதி திரட்டி புதிய மருத்துவமனை கட்டி சாதனை படைத்த ‘ரோட்டரி’!

ஈரோடு மாவட்டத்தில், மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.14 கோடி நிதி திரட்டி 45 நாளில் 70 ஆயிரம் சதுர அடியில் கட்டி முடித்து உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தது சாதனை படைத்துள்ளனர்.

அறிவுரை சொன்ன முதல்வர்.. 45 நாளில் 14 கோடி நிதி திரட்டி 
புதிய மருத்துவமனை கட்டி சாதனை படைத்த ‘ரோட்டரி’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரானா பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற பல்வேறு துரித நடவடிக்கைகளை தமிழ்நாட்டு முதல்வர் எடுத்து வந்த போது, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 550 படுக்கைகள் மட்டுமே இருந்தது.

இது ஈரோடை சுற்றியுள்ள திருப்பூர், நாமக்கல், கரூர், தருமபுரி, ஈரோடு, கோவை புற நகர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் கொரான பாதிக்கப்பட்டு இங்கு வந்த போது படுக்கை வசதி அளிக்க முடியவில்லை. எனவே ஏராளமான இடம் இருப்பதால் இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில் படுக்கை வசதி அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து முதல்வரின் கவனத்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி கொன்டு சென்றதையடுத்து முதல்வரின் வேண்டுகோளை ஏற்று முதல்வரின் பொது சேவைக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில், ஈரோடு மண்டல ரோட்டரி சங்கங்கள் சார்பில் பதினோரு ரோட்டரி அறக்கட்டளைகள் இணைந்து ரூ.14 கோடி நிதி திரட்டி ரோட்டரி ஹெல்த்கேர் என்ற பெயரில் 500 ஆக்சிஜன் படுக்கை மற்றும் வெண்டிலேட்டர், டயாலிசஸ், சிடி ஸ்கேன் எக்ஸ்ரே என சகல வசதியுடன் கூடிய மருத்துவமனையை கடந்த மே மாதம் 18ம் தேதி அஸ்திவார பணியை டீமேஜ் கட்டுமான நிறுவனம் துவக்கியது.

அறிவுரை சொன்ன முதல்வர்.. 45 நாளில் 14 கோடி நிதி திரட்டி 
புதிய மருத்துவமனை கட்டி சாதனை படைத்த ‘ரோட்டரி’!

நேற்று 45 வது நாளில் 70 ஆயிரம் சதுர அடியில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கட்டி முடித்து உள்ளனர். இந்த மருத்துவமனை கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு உலக சாதனை பட்டியலில் கின்னஸ் மற்றும் லிம்காவில் இடம் பிடித்தது சாதனை படைத்து உள்ளது.

தமிழ்நாட்டு முதல்வரின் அன்பு கட்டளையை ஏற்று வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமியின் தலைமையில், ரோட்டரி சங்க அறக்கட்டளையின் நிறுவன தலைவர் மருத்துவர் சகாதேவன் பெரும் முயற்சியால், முன்னால் ரோட்டரி ஆளுநர் சிவசங்கரன், ஈரோடு தலைவர் சிவபாலன், டீமேஜ் மேலான்மை இயக்குநர் நந்தகோபால், திட்ட தலைவர் செங்குட்டுவன், சண்முகசுந்தரம் மற்றும் சக்தி மசாலா நிறுவனத்தினர் முன்னின்று இந்த பணியை செய்து முடித்து உள்ளனர்.

இந்த மூன்றடுக்கு கட்டிடமருத்துவமனையை தமிழக முதல்வர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறந்து வைக்க உள்ளார். இந்த ரோட்டரி நிறுவனங்கள் முதல்வரின் ஒற்றை வேண்டுகோளுக்காக பெரும் நிதியான ரூ.14 கோடி திரட்டி 45 நாளில், ஒரு மருத்துவமனையை சகல வசதியுடன் கட்டி தந்த சம்பவம் ஐந்து மாவட்ட மக்கள் இன்று மட்டும் இன்றி, இனி வருங்கால சந்ததியினரும் பயன் பெறும் வாய்ப்பு பெற்றுள்ளது. தமிழக முதல்வரின் பொது நல பெருமையை என்றென்றும் பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை என சமூக ஆர்வலர் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories