தமிழ்நாடு

முதல்வர் உத்தரவுப்படி கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி... அமைச்சர் ஆய்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சேலம் இரும்பாலையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

முதல்வர் உத்தரவுப்படி கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி... அமைச்சர் ஆய்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சேலம் இரும்பாலையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு கூடுதலாக 500 படுக்கை வசதிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், “கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்திட சேலம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 966 படுக்கைகளும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 617 படுக்கைகளும் என 1,583 படுக்கைகள் உள்ளன.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2,896 படுக்கைகள் உள்ளன. சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், விரிவாக்கம் செய்து கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் 10 நாட்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து முதல்வர் உத்தரவின்படி கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விரிவாக்கப் பணியால் ஒரே இடத்தில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு, இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக உருவாக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories