தமிழ்நாடு

மொபைல் போனை அதிகமாகப் பயன்படுத்தியதற்காக தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்... தூத்துக்குடி அருகே பயங்கரம்!

மொபைல் போனை அதிகமாகப் பயன்படுத்தியதால் தங்கையை அண்ணனே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் போனை அதிகமாகப் பயன்படுத்தியதற்காக தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்... தூத்துக்குடி அருகே பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் மாலை ராஜா, மகள் கவிதா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகள் கவிதா பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

தற்போது பள்ளி வகுப்புகள் இணைய வழியில் நடப்பதால் கவிதாவுக்கு பெற்றோர் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளனர். இதையடுத்து கவிதா அதிக நேரம் போனிலேயே செலவழித்து வந்துள்ளார். பெற்றோரும், அண்ணன் மாலை ராஜாவும் அடிக்கடி கவிதாவை எச்சரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் செவ்வாயன்று கவிதா, மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அண்ணன் மாலை ராஜா தங்கையை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மாலை ராஜா, வீட்டில் இருந்த அரிவாளால் தங்கையை சரமாரியாக வெட்டியுள்ளார். பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கவிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாலை ராஜாவை வல்ல நாடு மலைப்பகுதியில் பதுங்கியிருந்தபோது போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories