அரசியல்

“விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் த.வெ.க!” : தி.மு.க கண்டனம்!

பிஞ்சுகளின் மனத்தில் நம்பிக்கையை விதைக்காமல், சந்தேகங்களை எழுப்பிவிட்டு வந்திருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா.

“விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் த.வெ.க!” : தி.மு.க கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் கள அரசியலைக் காட்டிலும், விளம்பர அரசியல் சற்று தலைதூக்கியுள்ளது என்பதை 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த தலைதூக்கல் மாறினால், த.வெ.க.வின் உண்மை முகம் வெளிப்பட்டுப்போகும் என்ற அச்சத்தில், விளம்பர அரசியல் மோகத்தை தக்கவைக்க த.வெ.க முன்னெடுக்கும் நடவடிக்கைகள், மக்களை முகம் சுழிக்க வைத்து வருகிறது.

குறிப்பாக, விளம்பர அரசியலை கைவிடவே கூடாது.

மக்கள் நேரடியான பயனை அடைந்துவிடவே கூடாது.

சமூக வலைதளங்களில் உண்மைகளை பேசிவிடவே கூடாது.

உண்மைத் தரவுகளை எடுத்துரைக்கவே கூடாது.

என்ற கோட்பாடுகளை நெஞ்சில் ஏந்தி செயல்படுகிற நிலையில், த.வெ.க இருந்து வருகிறது.

அவ்வரிசையில், தான் தொழில்துறை அமைச்சராக இருந்தாலும், மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் ஆய்வு செய்வேன் என்ற எண்ணோட்டத்தில், நான் All in All அமைச்சர் என்ற தோரணையுடன் ரீல்ஸும் கையுமாக செயல்பட்டு வருகிறார் அமைச்சர் கீர்த்தனா.

அப்படியான நிலையில், அரசுப் பள்ளிக்கு சென்று மாணவர்களிடையே ஆய்வு செய்கிறேன் என சொல்லி, மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிற வகையில், மேதாவித் தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிஞ்சுகளின் மனத்தில் நம்பிக்கையை விதைக்காமல், சந்தேகங்களை எழுப்பிவிட்டு வந்திருக்கிறார்.

இதனைச் சுட்டிக்காட்டி, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி, “அரசுப்பள்ளி மாணவியின் தன்னம்பிக்கையைத் தனது விளம்பர Reelsகாக Camera முன்னால் கேலி செய்து சங்கடப்படுத்திய அமைச்சர் கீர்த்தனாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சொந்த அனுபவங்களை மறந்த அமைச்சரின் இந்த அதிகாரம் மிக்க மேட்டிமைத்தனம், தவெக-வின் விளம்பர வெறிக்காக எவரையும் பலி குடுக்க தயங்க மாட்டோம் என்ற சிந்தனையை அப்பட்டமாகக் காட்டுகிறது.

தேர்தலுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, தங்கள் விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் இத்தகைய பொறுப்பற்ற செயலைத் தவெகவும் அதன் தலைவரும் கைவிட வேண்டும்.

பதவி உயர்ந்தால் மட்டும் போதாது; உங்களுக்கும் உங்களோடு இருப்பவர்களுக்கும் மனமும் உயர்ந்திருக்க வேண்டும், Uncle!” என்ற கண்டனப் பதிவை வெளியிடுள்ளது.

banner

Related Stories

Related Stories