தமிழ்நாடு

வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!

சென்னையில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, ஐயா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் சென்னை பீச் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஷிப்பிங் ஏஜென்சி ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு பணி முடித்துவிட்டுச் சேப்பாக்கம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வால் டாக்ஸ் சாலை வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர்களின் வாகனத்தின் மீது வசந்தகுமாரின் வாகனம் மோதியுள்ளது.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியுள்ளது. அப்போது, எதிர்த்தரப்பில் இருந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தகுமாரின் இடது பக்கக் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இரத்த வெள்ளத்தில் சரிந்த வசந்தகுமாரைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாகக் காவல் துறைக்கும் 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவசர ஊர்தி மூலம் அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பூக்கடைப் போலீசார், வசந்தகுமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கொலையாளிகளைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் CCTV காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories