முரசொலி தலையங்கம்

கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விஜய் இதில் இருந்து தப்ப முடியாது.

கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (07-07-2026)

கரூரில் தீர்க்க வேண்டிய கணக்கு என்ன?

திருடனே, ‘திருடன் ... திருடன்'என பிடிக்க ஓடியதைப் போல - கரூரில் 41 பேர் பலிக்கு காரணமானவர்கள், ‘கரூரில் தீர்க்க வேண்டிய கணக்கு இருக்கிறது' என்று கனைப்பதைப் பார்க்கும் போது இவர்கள் மக்களை எவ்வளவு மடையர்களாக நினைக்கிறார்கள் என்றே கேட்கத் தோன்றுகிறது. 'வாழும் மக்களுக்கு மூளை இல்லை' என்று நினைக்கும் கும்பலாக விஜய் கும்பல் இருக்கிறது.

‘“கரூரில் போலீஸ்காரர்களை வைத்து இத்தனை பேரைக் கொன்று விட்டு எங்கள் மீது பழிபோடுகிறார்கள். எங்களுக்கு கரூரில் தீர்க்க வேண்டிய ஒரு கணக்கு இருக்கிறது” என்று அரசியலமைப்பு சட்டத்தின் பால் பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகிறார். என்ன கணக்கு இருக்கிறது? கரூர் காவலர்கள் அனைவரையும் அழிக்கப் போகிறீர்களா? கரூரையே காவு வாங்கப் போகிறீர்களா? போலீஸ் துறையை வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் கருத்தா இது?

இப்படி ஆதவ் அர்ஜூனா பேசியதும் சமூக வலைதளத்தில் காறி துப்பினார்கள் மக்கள்.

எது கரூர் கணக்கு?

ஒட்டு மொத்தக் கட்சியும் தலைமறைவா ஓடி ஒளிஞ்சிங்களே... அதுவா?

கரூரில் மக்களோடு நிற்காமல் தலை தெறிக்க ஓடினீங்களே, அதுவா?

ஆடியோ லாஞ்சில் குத்தாட்டம் போட்டீங்களே, அதுவா?

CBI விசாரணைக்குப் போனீங்களே, அதுவா?

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்காமல், பஸ் வைத்து

உங்களைப் பார்க்க வரவழைத்தீங்களே... அதுவா?

இன்று பா.ஜ.க.வை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்க முடியாத நிலையில் இருக்கிறீங்களே... அதுவா?

இவ்வளவு நாள் கரூர் பக்கமே எட்டிப் பார்க்காமல் இப்போது கரூர்

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்குப் போகிறீங்களே, அதுவா?

- என்று மக்கள் கேட்கிறார்கள். இதில் ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல துப்பு உண்டா?

கரூரில் நடந்தது பச்சைப்படுகொலைகள் ஆகும். படம் சூட்டிங் எடுப்பதற்காக நடத்திய சதிச் செயலில் நடந்த உயிர் பலிகள் ஆகும். சொன்ன நேரத்துக்கு வராமல் மக்களைக் காக்க வைத்து, சோறு தண்ணீர் இல்லாமலும் கூட்டத்தை அதிகமாக்கி மூச்சுத்திணற வைத்து திட்டமிட்டு நடத்தியது ஆகும். விஜய்க்காக, விஜய்யால், விஜய்யைச் சுற்றி இருந்தவர்களால் நடத்தப்பட்டது இது. பலியானதும் விஜய் ரசிகர்கள். விஜய் என்றால் யாரென்று தெரியாத குழந்தைகள்.

மதியம் 12 மணிக்கு விஜய் கரூருக்கு வரப்போகிறார் என்று காலை 9 மணி முதல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் செய்தி பரப்பினார்கள். காலை 10 மணி முதல் கூட்டம் கூடத் தொடங்கி விட்டது. ஆனால் விஜய் வந்தது இரவு 7 மணி. இது யார் செய்த சதி?

கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்துக்கு மாலை 4.45 மணிக்கே வந்துவிட்டார். ஆனால் ஊருக்குள் வராமல் காலதாமதம் செய்தார். இது யார் செய்த சதி?

விஜய் வாகனம் ஊர்ந்து வருவதால் அதனுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள். கூட்டம் பேசும் இடத்திலும் பல்லாயிரக்கணக்கில் ஆட்கள் காத்திருக்கிறார்கள். கூட்டம் பேசும் இடத்துக்குள் விஜய் வாகனம் வருகிறது. அவ- ரோடு வந்தவர்களுக்கும், ஏற்கனவே அங்கு இருந்தவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்படுகிறது.

கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!

இப்படி நடக்கும் என்று காவல் துறை முன்கூட்டியே பயந்து த.வெ.க.வைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகிய இருவரிடமும் உயர் அதிகாரிகள் எச்சரித்தார்கள். ஆனால் அவர்கள் அலட்சியப்படுத்தினார்கள். விஜய்யும் அலட்சியப்படுத்தி விட்டார். பலியானார்கள் 41 பேர்.

கரூர் டவுன் காவல் நிலையம் FIR No. 855/2025 என பதிவு செய்யப்பட்ட வழக்கு இது. இந்த சதிச் செயல்கள் அனைத்தும் வெளியில் தெரிந்து விடும் என்பதற்காக சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஓடியது விஜய் கும்பல். இந்த வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டது. CBI பதிவு எண்: RC217282559922, தேதி 18.10.2025, CBI/AC-II, நியூ டெல்லி காவல் நிலையம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ.

இப்போது விசாரிக்கும் வழக்கில் அதன் விசாரணையைச் சிதைக்கும் வகையில், அதில் சாட்சி சொல்லும் போலீஸாரை மிரட்டும் வகையில் அமைச்சர் பேசி இருக்கிறார்.

“சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அக்கட்சியின் தலைவர் சென்று விட்டார்” என்று அப்போதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கண்டித்தார். விஜய் ஒருவாரமாக வெளியில் வரவில்லை. ஒருவாரம் கழித்து அழுகாச்சி வீடியோ வெளியிட்டார். ஆதவ் அர்ஜூனா தலைமறைவாகி விட்டார். உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவைத்து அவர்களிடம் ஆறுதல் சொன்னார் விஜய். இப்போது ஆட்சி மாறியதும் காட்சி மாறுகிறது. 'கணக்கு தீர்க்கப் போகிறார்களாம்'.

கரூரில் விஜய் கட்சி வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. தான் வெற்றி பெற்றது. விஜய் 41 பேரை தனது ஆணவத்துக்காக பலியிட்டார் என்பதை கரூர் மக்களே உறுதி செய்து விட்டார்கள். பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளான கரூர் எம்.எல்.ஏ. விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய வைத்து அங்கு இடைத்தேர்தலுக்கு ஏற்பாடு செய்வதும் விஜய்யின் குரூர மனப்பான்மைதான். ‘கரூரில் ஜெயித்துக் காண்பிக்கிறேன்' என்ற ஆணவம்தான். இடைத்தேர்தல் பரப்புரைக்கு போவதற்கு முன்னால் கரூருக்குப் போய் கணக்குக் காட்ட நினைக்கிறார் விஜய்.

‘ஊரான் வீட்டு நெய்யில உங்க குடும்பத்துக்கு ஸ்வீட் செய்யாதீங்க' என்பது விஜய் விட்ட டயலாக் ஆகும். தனது அலட்சியம், ஆணவத்துக்காகப் பலியான குடும்பத்துக்கு அரசு வேலை தர விஜய் திட்டமிட்டுள்ளார். 'இதுதான் ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட் செய்வது ஆகும்' என்று சமூக வலைதளத்தில் பலரும் கொந்தளித்து வருகிறார்கள்.

விஜய் ஆட்சிக்கு வந்ததும் போட்ட கையெழுத்தே பழிவாங்கும் நடவடிக்கைதான். 19 போலீஸ் அதிகாரிகளை கரூரில் இருந்து வேறுவேறு ஊருக்கு மாற்றினார் விஜய். இப்போது வெளிப்படையாக அந்த 19 பேர் தான் காரணம் என்பதைப் போல பேசுகிறார் அமைச்சர். எதையாவது சொல்லி செந்தில்பாலாஜியை கைது செய்யத் துடிக்கிறார் விஜய். அடுத்தவர்கள் மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விஜய் இதில் இருந்து தப்ப முடியாது.

விஜய்க்காக காத்திருந்து காத்திருந்து மூச்சுத் திணறி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41. இதில் ஆண்கள் 13 பேர். பெண்கள் 18 பேர். குழந்தைகள் 18 பேர். இதில் ஆண் குழந்தைகள் 5, பெண் குழந்தைகள் 5. இந்தப் பாவம் சும்மா விடாது.

banner

Related Stories

Related Stories