தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது; மாதாந்திர பணிகள் மட்டுமே நடைபெறும்”: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

தமிழகத்தில் மின் தடை இருக்காது, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது; மாதாந்திர பணிகள் மட்டுமே நடைபெறும்”: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சென்னை வடக்கு மண்டல் சார்பாக மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, எபினேசர், ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் சென்னை வடக்கு மண்டல அதிகாரிகள், மின்வாரிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னார் ஆய்வு கூட்டத்தில் உரையாற்றிய மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது போல் கடந்த காலத்தில் நடைபெற்ற தவறுகளால் மின் வாரியத்தில் நடைபெற்ற குறைபாடுகள் ஆய்வு செய்யப்படும். 2006ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு செயல்படுத்தப்படும்.

“தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது; மாதாந்திர பணிகள் மட்டுமே நடைபெறும்”: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

கொரோனா நோய் தொற்று தாக்கத்தை ஒரே மாதத்தில் குறைத்து நோய் தொற்று இல்லா மாநிலமாக தமிழக முதலமைச்சர் உருவாக்கி வருகிறார். ஒரே மாதத்தில் நோய் தொற்றை குறைத்தது போல் 10 நாட்களில் மின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள முடியும். மற்ற துறைகளை விட மின்சார துறை சிறப்பாக செயல்பட்டு முதலமைச்சருக்கு நற்பெயரை எடுத்து தர வேண்டும்.

சட்டமன்ற கூட்டத்தில் கடந்த 9 மாதமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்விக்கு கடைசி வரை அ.தி.மு.கவினர் பதில் சொல்லவில்லை. கடந்த வாரம் முதலமைச்சர் தொடங்கி வைத்த மின் நுகர்வோர் சேவை மையத்தில் இதுவரை 45500 அழைப்புகளில் புகார்கள் வந்துள்ளது. அதில் 35500 அழைப்புகளின் புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அழைப்புகளில் வந்த புகார்களின் பணிகள் நடைபெற்று வருகிறது ஒரிரு நாட்களில் முடிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தாமல் உள்ள மின்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிகள் முடிந்துள்ளது, சில இடங்களில் பெரிய அளவில் பணிகள் உள்ளது என்றும் இனி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் . மேலும், மின் தடை புகார்களை பொத்தாம் பொதுவாக தெரிவிக்காமல் மின் இணைப்பு எண் மற்றும் மின் தடை ஏற்பட்ட பகுதிகளோடு தெரிவித்தால் உடனடியாக மின் இணைப்பு சரி செய்யப்படும்.

“தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது; மாதாந்திர பணிகள் மட்டுமே நடைபெறும்”: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

கொரோனா தாக்கம் காரணமாக வீடு வாரியாக கணக்கெடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. 3 முறைகளில் மின் கட்டணம் செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டது அதில் 11 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மின் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். மின் கட்டணம் அதிகமாக உள்ளது புகார்கள் வந்தால் துறையின் சார்பில் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வு மேற்கொண்டு மின் கணக்கீடு தவறுகள் ஏற்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி தமிழகத்தில் மின் தடை இருக்காது, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். 4 லட்சத்து 23 ஆயிரம் விவாசாயிகள் மின் இணைப்பிற்காக பதிவு செய்து காத்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை பேர் மின் இணைப்பிற்கால காத்துகொண்டிருக்கும் போது தமிழகம் எப்படி மின் மிகை மாநிலமாக இருக்கும் என கேள்வியெழுப்பிய அவர், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் எதையும் கொண்டுவரப்படவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories