தமிழ்நாடு

“ஊழல் மிகுந்த துறையாக இருந்த பதிவுத்துறையை அதிரடி நடவடிக்கை மூலம் சீரமைத்துள்ளோம்” : அமைச்சர் மூர்த்தி!

அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் மிகுந்த துறையாக இருந்த பதிவுத்துறையை பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் சீரமைத்து உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

“ஊழல் மிகுந்த துறையாக இருந்த பதிவுத்துறையை அதிரடி நடவடிக்கை மூலம் சீரமைத்துள்ளோம்” : அமைச்சர் மூர்த்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சந்தோஷம் நகர், புதிய ஜி.ஆர்.நகர், அல் அமீன் நகர் ஆகிய பகுதிகளில் மின்மாற்றி மற்றும் ஆழ்துளைக் கிணறு உள்ளிட்டவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, “முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மதுரையில் மின்சாரம் தடையின்றி கிடைக்க 10 உப மின்நிலையங்கள் மற்றும் போர்வெல்கள் என தி.மு.க ஆட்சிக்கு வந்த 50 நாட்களிலேயே பல்வேறு மக்கள் நல திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம்.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுக்கே வெற்றி கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். சட்டமன்ற தேர்தலின் போது கருவாடு மீனாகாது என்று சொன்னவர்கள் அவர்கள். ஆனால், நடந்ததே வேறு.

“ஊழல் மிகுந்த துறையாக இருந்த பதிவுத்துறையை அதிரடி நடவடிக்கை மூலம் சீரமைத்துள்ளோம்” : அமைச்சர் மூர்த்தி!

பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியின் குளறுபடியால் பல்வேறு துறைகளில் 34000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார துறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஊழல் மிகுந்த துறையாக இருந்த பதிவுத்துறையை, அதிரடியான முடிவுகள் எடுத்து சீரமைத்து வருகிறோம்.

நிர்வாகத் திறமையற்ற அ.தி.மு.க அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட வைக்கவில்லை. நாங்கள் அதற்கான பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம். மக்கள் செல்வாக்கு எங்களுக்கே உள்ளது என்பதற்குச் சான்று தான் இப்போதைய ஆட்சி. இனி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அது தொடரும்.

2019-20 ஆண்டில் வேலூரில் போலி பத்திர முறைகேடு நடைபெற்றுள்ளது. அது போன்ற செயல்கள் இனி நடைபெறக் கூடாது என்ற காரணத்தினால் பதிவுத்துறையில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories