தமிழ்நாடு

“கொரோனா நோயைத் தடுப்பதில் ஒன்றிய பா.ஜ.க அரசு மெத்தனம் காட்டுகிறது” : டி.ஆர்.பாலு MP குற்றச்சாட்டு !

நாட்டில் கொரோனா பரவலால் ஏற்ப்பட்டுள்ள மோசமான சூழ்நிலையில் நோயை தடுப்பதற்கும் - தடுப்பூசியை தமிழகத்திற்கு அனுப்புவதற்கும் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது என்று டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோய் தடுப்பு பராமரிப்பு மையத்தில் கூடுதலாக 100 கொரோனா படுக்கைகள் தொடக்க விழா நடை பெற்றது. ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இவ்விழாவில் கலந்து கொண்டு 100 படுக்கைகள் கொண்ட இப்புதிய கொரோனா தடுப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் டி. ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மத்திய அரசு தடுப்பூசிகளை அதிக அளவில் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியும், செங்கல்பட்டில் உள்ள மருந்து தயாரிக்கும் ஆலையை உடனே இயங்கச் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழக முதல்வர் அவர்கள் ஆணைப்படி நானும், தொழில்துறை அமைச்சர் தங்கதென்னரசுவும் டெல்லிக்குச் சென்று 3 மத்திய அமைச்சர்களை சந்தித்தோம்.

“கொரோனா நோயைத் தடுப்பதில்  ஒன்றிய பா.ஜ.க அரசு மெத்தனம் காட்டுகிறது” : டி.ஆர்.பாலு MP குற்றச்சாட்டு !

முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் டெல்லி சென்று 3 மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை நிலைமைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லி இதை உடனடியாக சமாளிப்பதற்கு அதிகமான தடுப்பூசிகளை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினோம்.

மேலும் ஒரு கோரிக்கையை தமிழக முதல்வர் சார்பில் வைத்தோம். செங்கல்பட்டில் மத்திய அரசுக்குச் சொந்தமான ரூ.700 கோடி செலவில் தொடங்கப்பட்ட தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறினோம்.

தமிழக முதல்வர் கடந்த வாரம் செங்கல்பட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டு தடுப்பூசி தயாரிக்கும் பணியினை விரைவில் தொடங்கிட மத்தியன் அரசு முடுக்கிவிட வேண்டும் என்று வைத்தன் கோரிக்கையை வலியுறுத்திக் கூறினோம்.

மத்திய அரசு 1 வார காலத்திற்குள் இத்தொழிற்சாலையை திறப்பது பற்றி முடிவு செய்யும் என்று கூறி எங்களை அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழக அரசு தானே எடுத்து நடத்த தயாராக உள்ளது என்று தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி கூறிவருகிறார்.

மேலும் 3 திறமையான தொழில் நிறுவனங்கள் தமிழக அரசுடன் இணைந்து பங்குதாரராக சேர்ந்து தடுப்பூசி தயாரிக்கும் ஆலையை இயக்கிடச் செய்து தடுப்பூசிகளை தயாரிக்க முன்வந்துள்ளது. இது பற்றி தமிழக முதல்வர் விரைந்து முடிவு செய்வார்.

“கொரோனா நோயைத் தடுப்பதில்  ஒன்றிய பா.ஜ.க அரசு மெத்தனம் காட்டுகிறது” : டி.ஆர்.பாலு MP குற்றச்சாட்டு !

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது என்று நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று மக்கள் மனதில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. தமிழகத்திற்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நிலைமை சீராகிவிட்டது. இங்கிலாந்திலும் நிலைமை சரியாகிவிட்டது. அகில உலகிலு ம்நிலைமை சரியாகிவிட்டது. ஆகவே மத்திய அரசு தடுப்பூசிகளை வெளிநாட்டில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்து நாட்டு மக்களை இந்த பேரிடரில் இருந்து காத்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories