தமிழ்நாடு

“முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு தாயாகவே மாறிவிட்டார்” : கோவை ESI மருத்துவமனை டாக்டர் இரவீந்திரன் நெகிழ்ச்சி!

“முதல்வர் அவர்கள் ஒரு தாயாகவே மாறிவிட்டார்” என்று அம்மருத்துவமனையின் டாக்டர் இரவீந்திரன், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

“முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு தாயாகவே மாறிவிட்டார்” : கோவை ESI மருத்துவமனை டாக்டர் இரவீந்திரன் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவையில் இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று, அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருத்துக் கேட்ட போது, முதல்வர் அவர்கள் ஒரு தாயாகவே மாறிவிட்டார்” என்று அம்மருத்துவமனையின் டாக்டர் இரவீந்திரன், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

“அரசின் அரவணைப்பில் மேற்கு மண்டலம்! முதலமைச்சரின் பயணமும் தடுப்புப் பணிகளும்!” எனும் தலைப்பில், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அம்மருத்துவமனையின் டாக்டரும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறியவருமான டாக்டர் ரவீந்திரன் கூறியதாவது:-

முதல்வர் அவர்கள் ஒரு அம்மாவாகவே மாறிவிட்டார். அனைவரிடமும் கருத்துக்களைக் கேட்கிறார். “நீங்கள், டாக்டர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே ‘இன்சன்டிவ்’ (ஊக்கத்தொகை) கொடுத்தீர்கள் சார்! டாக்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நிறைய கொரோனா மரணங்களை அவர்கள் பார்க்கிறார்கள். இளம் வயதுடையவர்களின் மரணங்களைப் பார்க்கிறார்கள்!” என்றேன் நான்.

“முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு தாயாகவே மாறிவிட்டார்” : கோவை ESI மருத்துவமனை டாக்டர் இரவீந்திரன் நெகிழ்ச்சி!

அடுத்த நிமிடம் முதல்வர் “நான் உங்கள் அப்பா மாதிரி” என்கிறார். (நெகிழ்கிறார்) சொல்வதற்கே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. “நான் உங்கள் அப்பா மாதிரி, பயப்படாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று நோயாளிகளிடம் முதல்வர் கூறினார். குறைந்த வார்த்தைகள்தானே அவர் பேசுகிறார். அந்தக் குறைந்த வார்த்தைகளில் என்ன ஒரு மெசேஜ்!

நோயாளிகளைப் பார்த்தபோது, ஒரு அப்பா மாதிரி முதல்வர் மாறிவிட்டார். அடுத்து, நோய் குணமானவர்களைச் சந்திக்கிறார். டாக்டர் புவிதா ஒரு நோயாளி. Pathology பேராசிரியர். அவரிடம் என்ன கேட்கிறார் தெரியுமா?

“அம்மா நல்லாயிட்டீங்களா? என்ன சிகிச்சை எடுத்துக் கொண்டீர்கள்? எல்லா சிகிச்சையும் முறையாக நடந்ததா?” என்கிறார். “என்னையும் ஒரு நோயாளியைப் போலத்தான் நடத்தினார்கள்.

டாக்டர் ரவீந்திரன் அவர்கள் அருமையான முறையில் வைத்தியம் செய்தார். இவர் என்னுடைய ஆசிரியர்” என்று கூறி, முதல்வரிடம், டாக்டர் புவிதா, என்னை அறிமுகம் செய்து வைத்தார். நோயாளிகளிடம், “நீங்கள் எந்த ஊர்? என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்படுகிறது?” என்று கேட்கிறார் முதல்வர். ஒரு நோயாளி கையெடுத்துக் கும்பிட்டு, “இந்த மாதிரி ஒரு சிகிச்சை, எத்தனை லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது” என்றார்.

“முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு தாயாகவே மாறிவிட்டார்” : கோவை ESI மருத்துவமனை டாக்டர் இரவீந்திரன் நெகிழ்ச்சி!

முதல்வர் ஒரு வைத்தியராகவே மாறிவிட்டார். என்ன சிகிச்சை கொடுக்கிறீர்கள் என்று எங்களிடம் முழுக்கக் கேட்கிறார். பி.பி.கிட் போட்டிருப்பதால், நான் சொல்லுவது, முதல்வருக்குப் பாதிதான்கேட்கும் என்று நினைத்தேன். மருத்துவமனையில் ஆய்வினை முடித்தவுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டி கொடுக்கும் போது, நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் முதலமைச்சர் திருப்பிக் கூறுகிறார். நான் சொன்னதை இரண்டு முறை கேட்டால்தான் எனக்கே புரியும். ஆனால் முதல்வர் நான் கூறியது அனைத்தையும் அப்படியே பேட்டியில் கூறினார்.

முதல்வர், டாக்டர் மாதிரிப் பேசுகிறார். அம்மா மாதிரிப் பேசுகிறார், அப்பா மாதிரிப் பேசுகிறார். நானே இப்போது இந்த டாக்டர் பொறுப்பை விடுத்து, கட்சியில் சேர்ந்து விடலாமா என்ற எண்ணத்திற்கு வந்து விட்டேன். இவ்வாறு ‘கலைஞர்’ செய்திகள் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் டாக்டர் இரவீந்திரன் கருத்துக் கூறினார்.

banner

Related Stories

Related Stories