இந்தியா

மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே.. ஒன்றிய பா.ஜ.க அரசின் பாசிசத்தை நடுநடுங்க வைக்கும் மம்தாவின் உரிமைக் குரல்!

ஒன்றிய பா.ஜ.க அரசின் பாசிசத்தை நடுநடுங்க வைக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் உரிமைக் குரல் என்ற தலைப்பில் முரசொலி நாளேட்டில் ‘சிலந்தியின்’ கட்டுரை வெளியாகியுள்ளது

மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே.. ஒன்றிய பா.ஜ.க அரசின் பாசிசத்தை நடுநடுங்க வைக்கும் மம்தாவின் உரிமைக் குரல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“Mr. Prime minister,

Mr.Busy Prime minister,

Mr. Mon key Bath Prime minister

What you want?

you want to finish me. never & ever!”

இதோ!

இடறிய புலி சிலிர்த்தெழுந்து உறுமுகிறது. இது பிரதமருக்கு விடுத்த அறைகூவல் அல்ல; உரிமைகளுக்காக எழுப்பப்பட்ட உரத்த குரல்.

புலியின் உறுமலாக பேரிடியாய் நாடெங்கும் எதிரொலித்து அதிரச் செய்துள்ளது!

அடிமைப் புழுக்களாய், உரிமைகளைப் பறி கொடுத்து சேவகம் புரியும் பல மாநிலங்கள் இந்தக் குரல் கேட்டுச் சிலிர்க்கின்றன!

பிரதமரின் முழங்கால் வரை குனிந்து பணிந்து கிடந்த பல முதலமைச்சர்களின் முதுகெலும்புகளை இந்த ஆவேசக் குரல் நிமிர்த்துகிறது! ‘அழுத்த அழுத்த புழுவும் புலியாகும்’ என்பது போல இந்த வங்கத்துப் புலி பாய்ந்து எழுகிறது. சிங்கமாக கர்ஜிக்கிறது. முதலமைச்சர் மம்தா எழுப்பியது உரிமைக்குரல் மட்டுமல்ல; எதேச்சதிகாரத்துக்கு எதிராக எழுப்பப்பட்ட எழுச்சிக்குரல், பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெடுக்கும் புரட்சிக்குரல்!

“மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்

மிஸ்டர் பிசி பிரைம் மினிஸ்டர்

மிஸ்டர் மன் கி பாத் பிரைம் மினிஸ்டர்

உங்களுக்கு என்ன வேண்டும்?

நீங்கள் என் கதையை முடிக்க நினைக்கிறீர்களா?

உங்களால் அது முடியும் என நினைக்கிறீர்களா?

அது; எப்போதும் முடியாது, என்றும் நடக்காது! மக்கள் ஆதரவும், அரவணைப்பும் எனக்கு இருக்கும் வரை அது (உங்களால்) முடியாத ஒன்று!

நான் அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.... இந்த நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளுக்கும், மூத்த முன்னோடி அரசியல் தலைவர்களுக்கும், அரசுசார்ந்த, சாராத பணியாளர்களுக்கும், எல்லா முன்னணித் தலைவர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும், மாநில முதலமைச்சர்களுக்கும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும், நான் விடுக்கும் வேண்டுகோள், “தயவுசெய்து எல்லோரும் இணைந்து நின்று செயல்படுவோம். ஒன்றுபடுங்கள்....” - இப்படி மேற்கு வங்க மாநிலத்தின் பெண் சிங்கம் கர்ஜிக்கிறது!

இந்த கர்ஜனை இந்த நாட்டை பாசிசத்தின் வேட்டைக் காடாக்கியுள்ள பா.ஜ.க கும்பல் பயந்து நடுங்கும் வகையில் எங்கும் எதிரொலிக்கிறது. மேற்கு வங்கத்தின் இந்தக் குரல், வங்கத்தின் குரல் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிரொலிக்க இருக்கும் குரல்!

பா.ஜ.க ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரல் மட்டுமல்ல; ‘திருந்துங்கள்; இல்லையேல் திருத்தப்படுவீர்கள்’ என்று வரைக்கும் எச்சரிக்கைக் குரலும்தான்!

banner

Related Stories

Related Stories