தமிழ்நாடு

“மோடிக்கு தி.மு.க வரலாறு தெரியாது போலும்” - சாதனைகளை பட்டியலிட்ட வைகோ! #DMK4TN 

பிரதமர் மோடிக்கு தி.மு.கவின் வரலாறு தெரியாது என சாத்தூர் பரப்புரையின் போது ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆவேச பேச்சு.

“மோடிக்கு தி.மு.க வரலாறு தெரியாது போலும்” - சாதனைகளை பட்டியலிட்ட வைகோ! #DMK4TN 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி சார்பாக சாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க நகர செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வேட்பாளர் ரகுராமனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

இந்தியாவில் ஒரு ஜனநாயக யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த யுத்தம் பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் எதிர்த்து வந்தனர். டெல்லியில் 200 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடுகிறார்கள். இதில் 240 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள்.

விவசாய திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் அதானி, அம்பானி கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பெற்று கொண்டு அதிக அளவில் சேமித்து வைத்து செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி மக்களிடம் அதிக விலைக்கு விற்கும் சூழ்நிலை ஏற்படும் அப்பொழுது அரசு கொள்முதல் நிலையம் இருக்காது விவசாய மண்டி இருக்காது.

மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுக்காக 5 சிறப்பு சிகிச்சை முகாம் நடத்தியுள்ளேன். இதில் 24 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். விருதுநகர் செங்கோட்டை அகல ரயில் பாதை உருவாகுவதற்கு மத்திய அரசிடம் முறையிட்டு அகல ரயில்பாதை திட்டத்தைக் கொண்டு வந்து அதனை மானாமதுரை வரை நீட்டிப்பு செய்தேன்.

“மோடிக்கு தி.மு.க வரலாறு தெரியாது போலும்” - சாதனைகளை பட்டியலிட்ட வைகோ! #DMK4TN 

ம.தி.மு.க வேட்பாளர் ரகுராமன் உங்களுக்கான மருத்துவராக செயல்படுவார். அவர் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ ஆனால் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும். தீப்பெட்டி தொழிலும் பட்டாசு தொழிலும் நலிவடைந்த போது பட்டாசு தொழிலுக்கு ஆபத்து வந்த பொழுது நான் அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று பிரதமரை பார்த்தேன். உள்துறை அமைச்சரை பார்த்தேன். பட்டாசு தொழிலை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்.

தீப்பெட்டி தொழிலுக்கு பெரிய ஆபத்து வந்தபோது அதற்கும் தீப்பெட்டி தொழில் சார்பாக பிரதிநிதிகளை அழைத்து மத்திய அமைச்சரை சந்தித்து தீப்பெட்டி தொழில் பிரச்சினையை எடுத்துக் கூறி அதை பாதுகாத்து கொடுத்தேன். இந்த தொகுதியில் பொது நன்மைக்காக பாடுபடுகிறேன். மத்திய அரசு கொண்டு வந்த கூட்டு குடிநீர் திட்டத்தில் தமிழக அரசு 4 மாவட்டங்களுக்கு அறிவித்த நிலையில் வெங்கையா நாயுடுவை சந்தித்து விருதுநகர் மாவட்டத்துக்கும் சேர்த்து கூட்டு குடிநீர் திட்டத்தினை வாங்கித் தந்தேன். 575 கிராமங்கள் இதனால் பயனடைந்தது.

இலங்கை ராஜபக்சேவை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய பிரச்சினையில் நான் சிறையில் இருந்தபொழுது திட்டம் நிறைவேற 10% உங்கள் ஊரில் இருந்து பணம் கட்டுங்கள் என்று எல்லாக் கட்சித் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் கடிதம் எழுதினேன். மதிப்பு கூட்டு வரியை குறைத்தால் கேஸ் சிலிண்டர் குறையும். இதனை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையும்போது அதன் தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றுவர்.

மத்திய பா.ஜ.க அரசின் பிரதமர் மோடி மதுரையில் தனது பிரச்சாரத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கூறுகிறார் . அவருக்கு தி.மு.கவின் வரலாறு தெரியாது. திராவிடத் தந்தை பெரியார் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று குரல் எழுப்பினார். தி.மு.கவின் பேரறிஞர் அண்ணா பெண்களுக்கு சொத்துரிமையில் பங்கு வேண்டும் என்று குறிப்பிட்டார். தி.மு.க தலைவர் கலைஞர் அதனை சட்டம் ஆக்கினார்.

கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை அறிவித்தார். தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை 40% அறிவித்து உள்ளார். முதலமைச்சர் துணை முதல்வரும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கவர்னரிடம் மனு கொடுத்துள்ளார். இது இப்பொழுது கிடப்பில் போடப்பட்டாலும் அடுத்த ஆட்சி மாறும் பொழுது இவர்கள் உள்ளே போவது உறுதி. உள்ளே போவது உறுதி.”

இவ்வாறு கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories