லிவர்பூர் கால்பந்து கிளப்பின் நட்சத்திர வீரர் டியாகோ ஜோட்டா. 28 வயது ஆகும் இந்த இளம் வீரர் போர்ச்சுகல் அணியின் வீரரும் கூட. உலக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இவர் லிவர்பூல் கிளப்புக்காக 182 போட்டிகள் விளையாடி 65 கோல்களை அடித்துள்ளார். கடந்த சீசனில் லிவர்பூல் பிரீமியர் லீக் கோப்பை வெல்ல இந்த இளம் வீரரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்ததுள்ளது.
அதேபோல் போர்ச்சுகல் அணிக்காக 49 போட்டிகளில் விளையாடி,இரண்டு முறை UEFA நேஷன்ஸ் லீக்கை வென்றுள்ளார். இவரின் கால்பந்தாட்ட திறமையை இப்போதுதான் ரசிகர்கள் கொண்டாட துவங்கி இருந்தனர்.
இந்நிலையில், ஸ்பெயின் சாலை விபத்தில் டியாகோ ஜோட்டா உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் அவரது சகோதரரும் உயிரிழந்து இருக்கிறார். இவரும் கால்பந்து வீரர்தான். அண்மையில்தான் டியாகோ ஜோட்டாவுக்கு திருமணம் நடந்துள்ளது.
இந்த மகிழ்ச்சி தொடர்வதற்குள்ளே டியாகோ ஜோட்டா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது, சக கால்பந்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”எங்கள் இருவருக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு இருந்தது. பல போர்ச்சுகல் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் டியாகோ ஜோட்டா இருந்துள்ளார். நாங்கள் அனைவரும் அவரை இழந்து தவிக்கிறோம். அவரது குடும்பத்திற்கும், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.