இந்தியா

பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆதரவாளரான யோகா சாமியார் ராம்தேவ், பதஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் அதிகளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.சில மாதங்களுக்கு முன்பு கூட அலோபதி மருத்துவத்துக்கு எதிரான பல்வேறு பொய்யான விளம்பரங்களையும் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டது. இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

தற்போது, பதஞ்சலி நிறுவனம் டாபர் நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிராக விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தை கண்டித்து டாபர் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாபர் நிறுவன வழக்கறிஞர் உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பிய பிறகும் கூட, ஒரே வாரத்தில் 6182 விளம்பரங்களை டாபர் நிறுவனத்திற்கு எதிராக வெளியிட்டதாக குற்றம் சாட்டினார்.

டாபர் தயாரிப்பில் 47 ஆயுர்வேத மருந்துகள் மட்டுமே உள்ளன. ஆனால் பதஞ்சலி தயாரிப்பில் 51 மருந்துகள் உள்ளதாகவும், அதுவே சிறந்தது என்கிற வகையில் ஒப்பீடு செய்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. இது தங்களது தயாரிப்பை பாதிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பதஞ்சலி விளம்பரங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது. பின்னர், வழக்கை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

banner

Related Stories

Related Stories