தமிழ்நாடு

“2016ல் இருந்து வெல்லமண்டி நடராஜன் காணவில்லை” : போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய மக்கள் !

திருச்சி கிழக்கு தொகுதி முழுவதும் அ.தி.மு.க அமைச்சர் காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“2016ல் இருந்து வெல்லமண்டி நடராஜன் காணவில்லை” :  போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. மேலும் தேர்தல் பரப்புரைகள் இன்று இரவு 7 மணியுடன் நிறைவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சட்டமன்ற தேர்தலில், தி.மு.க கூட்டணிதான் அதிக இடங்கள் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் தோல்வி பயத்தில் இருக்கும் அ.தி.மு.க மாநிலம் முழுவதும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அ.தி.மு.க வேட்பாளர் வரை யார் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றாலும், 10 வருட ஆட்சியில் மக்களுக்கு என்ன செஞ்சீங்க இன்றைக்கு வாக்கு கேட்டு வந்துட்டிங்க கேள்வி கேட்டு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவரும் வேலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று காலை ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில், “2016 ம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த ஐந்து வருட காலமாக அவரது தொகுதியில் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது தொகுதி மக்கள் அதிருப்தி இருக்கும் நிலையில், இறுதிநாள் பிரச்சாரத்தில் வெல்லமண்டி நடிராஜன் காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது, இந்த தேர்தலில் இவர் கட்டாயம் படுதோல்வி அடைவார் என்பதையே காட்டுகிறது.

banner

Related Stories

Related Stories