அரசியல்

நீட் கொன்ற அனிதா அதிமுக ஆதரவாக பேசுவது போல் வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் மாஃபா : இந்த பிழைப்பு தேவையா ?

நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதா அதிமுகவை ஆதரித்து பேசுவது போன்ற போலி வீடியோவை வெளியிட்ட மாஃபா பாண்டியராஜனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

நீட் கொன்ற அனிதா அதிமுக ஆதரவாக பேசுவது போல் வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் மாஃபா : இந்த பிழைப்பு தேவையா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தின் 16வது சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 6) நடைபெற இருக்கும் நிலையில் இன்று மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை பணிகள் அனைத்தும் நிறைவடைய இருக்கிறது. ஆகவே தி.மு.க மற்றும் கூட்டணி அரசியல் கட்சிகள் கடைசி நேர பரப்புரையில் தீவிரமாக பணியாற்று வருகின்றனர்.

ஆனால் அ.தி.மு.க அரசோ தாங்கள் செய்த மக்கள் நலத்திட்டங்கள் என ஏதும் இல்லாததால் பணத்தை வைத்து ஆட்சியை தக்கவைத்து விடலாம் என்ற நோக்கில் படுதீவிரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டுவாடா பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோக மக்களிடம் வாக்கு சேகரிக்கும் செல்லுமிடங்களில் எல்லாம் தனக்கு ரத்த கொதிப்பு இருக்கிறது, சர்க்கரை நோய் இருக்கிறது என ஒரு புறம் அமைச்சரும், அழுது அனுதாப ஓட்டை பெற்றுவிடலாம் என முதலமைச்சரும் பரப்புரை செய்வது மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டது ஆளும் அ.தி.மு.கவினரை சோகமும் தோல்வி பயமும் ஆட்கொண்டிருக்கிறது.

அதன் காரணமாக பாஜக அரசின் துணையுடன் எதிர்க்கட்சியினர் மீது வருமான வரி சோதனைகளையும் ஏவி பார்த்து அதிலும் தோல்வியையே கண்டுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.கவின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான பாண்டியராஜன் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா அ.தி.மு.கவுக்கு ஆதரவை தெரிவித்து பேசுவது போன்ற போலி வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் உள்ள நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டதுமல்லாமல், அதனால் 10க்கும் மேலான மாணவ செல்வங்களை காவு வாங்கிய இந்த அதிமுக பாஜக கூட்டணி தற்போது நீட்டால் உயிரிழந்த மாணவி அனிதாவே அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவது போல் சித்தரித்துள்ளது ஆட்சியாளர்களின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு மேன்மேலும் அதிகரித்துக்கொண்டே போவதற்கு இதுவே உதாரணம் எனவும் சமூகவலைதள வாசிகள் விமர்சித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories