தமிழ்நாடு

புதுச்சேரியில் பணப்பட்டுவாடா படுஜோர் - மோடி படத்துடன்  தங்கக் காசு, பணப்பட்டுவாடா செய்த பா.ஜ.க!

புதுச்சேரியில் பா.ஜ.கவினர் தங்கக் காசு மற்றும் பணப்பட்டுவாடா செய்துவிட்டு அதிகாரிகளைக் கண்டவுடன் தப்பி ஓடி சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் பணப்பட்டுவாடா படுஜோர் - மோடி படத்துடன்  தங்கக் காசு, பணப்பட்டுவாடா செய்த பா.ஜ.க!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று இரவு 7 மணியோடு நிறைவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க பணப்பட்டுவாடா செய்வதைப் போலவே, புதுச்சேரியிலும் இவர்கள் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் பா.ஜ.கவினர் தங்கக் காசு மற்றும் பணப்பட்டுவாடா செய்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகளைக் கண்டவுடன் பா.ஜ.கவினர் கையிலிருந்த பையைப் போட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.

பின்னர், பா.ஜ.கவினர் வீசி சென்ற பையில் 149 தங்கக் காசுகளும் ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பணம் இருந்தது. இதையடுத்து திருநள்ளாறு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

banner

Related Stories

Related Stories