தமிழ்நாடு

“பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் 3 பேர் கைது”: கடைசி நேரத்திலும் திருந்தாத எடப்பாடி அரசு!

திண்டிவனத்தில் ரூபாய் ஒரு லட்சத்துடன் காரில் வலம் வந்த அ.தி.மு.க பிரமுகர்கள் 3 பேரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்து கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

“பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் 3 பேர் கைது”: கடைசி நேரத்திலும் திருந்தாத எடப்பாடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க வினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அன்பழகன் தலைமையிலான பறக்கும் படையினர் திண்டிவனம் ஜெயபுரம் ரவுண்டானா அருகே வந்த காரை மடக்கி நிறுத்தி சோதனை செய்ததில் பறக்கும் படையினரை பார்த்து காரிலிருந்து இறங்கி இருவர் தப்பிச் செல்ல முயன்றனர்.

அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் ஒரு லட்சம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் திண்டிவனம் காவல் நிலையம் அழைத்து சென்று மேலும் விசாரணை செய்ததில் தென்பசார் பகுதியை சேர்ந்த மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க பொருளாளர் ராம்குமார், அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் சிங்கனூரை சேர்ந்த சேகர் என தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் 3 பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories