தமிழ்நாடு

ஊடகங்களுக்கு மிரட்டல் : தோல்வி பயத்தால் சீப்பை ஒளிக்கும் பைத்தியக்கார செயலில் ஈடுபடும் பழனிச்சாமி அரசு!

தேர்தல் நேரத்தில் தோல்வி பயத்தால், சீப்பை ஒளித்து வைத்து திருமணத்தை நிறுத்த நினைக்கும் பைத்தியக்கார செயலில் பழனிச்சாமி அரசு இறங்கியுள்ளது!

ஊடகங்களுக்கு மிரட்டல் : தோல்வி பயத்தால் சீப்பை ஒளிக்கும்  பைத்தியக்கார செயலில் ஈடுபடும் பழனிச்சாமி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அ.தி.மு.க அணிக்கு தோல்வி உறுதியாகிவிட்டது; கோட்டையிலிருந்து வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகள் - மொத்தமாக அ.தி.மு.க அணிக்கு எதிராக உருவாகி உலா வரத் தொடங்கி விட்டன! இந்த நேரத்தில் சீப்பை ஒளித்து வைத்து திருமணத்தை நிறுத்த நினைக்கும் பைத்தியக்கார செயலில் பழனிச்சாமி அரசு இறங்கியுள்ளது!

‘தினத்தந்தி’ செய்தி தொலைக்காட்சியில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக, தொகுதி வாரியாக வெளிவரும் கருத்துக் கணிப்புகள், தமிழக அமைச்சர்கள் அடிவயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது! அமைச்சர்கள் பலரே தோல்வியை சந்திக்கும் நிலை தெளிவாகத் தெரிகிறது!

கருத்துக் கணிப்புகளைக் கண்டிடும் அ.தி.மு.க.வினர் தங்கள் அரசின் அந்திமம் நெருங்கிவிட்டதை உணர்ந்து; இனி எந்த முயற்சியும் பயன்படாது; கையில் கிடைத்த வரை இலாபம் எனும் நோக்கோடு தேர்தல் செலவுக்குக் கொடுத்த பணத்தை தேட்டை போடத் தொடங்கிவிட்டனர்!

அதிர்ச்சியில் உறைந்து போனவர்கள், மிரட்டத் தொடங்கியுள்ளனர். அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு கேபிள்களில் உங்கள் தொலைக்காட்சி இணைப்பு அகற்றப்படும். இல்லையேல் வேறு இடத்திற்கு மாற்றி இருட்டடிப்பு செய்யப்படும் என்றெல்லாம் பயமுறுத்தத் தொடங்கியுள்ளனர்!

உண்மை நிலைக்கு மாறாக, அ.தி.மு.க அணிக்கு சாதகமாக கருத்துக்கணிப்பை தயார் செய்து அதனை ஒளிபரப்ப சில ஊடகங்கள் வற்புறுத்தப்படுகின்றன; செல்வாக்குள்ள ஊடகங்கள் அதற்கு செவி சாய்க்க மறுத்துள்ள நிலையில் ஓரிரு ஊடகங்கள் விளம்பரப் பணத்துக்கு ஆசைப்பட்டு வெளியிட முடிவெடுத்துள்ளன.

இந்த ஆட்டம் எல்லாம் இன்னும் சிறிது நாட்கள்தான். இன்னும் சொல்லப் போனால் நாட்கள் எண்ணத் தொடங்கப்பட்டுவிட்டன! எல்லாவற்றிற்கும் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது!

banner

Related Stories

Related Stories