தமிழ்நாடு

‘லேப்டாப் கொடுக்கவில்லை’ என்று புகார் சொன்ன மாணவி : டெண்டர் எடுத்தவன் மேல் பழியைப் போட்ட வைத்திலிங்கம்!

லேப்டாப் கொடுக்கவில்லை என மாணவி கேட்ட கேள்விக்குப் பதில் கூற முடியாமல் அ.தி.மு.க வேட்பாளர் வைத்திலிங்கம் திணறினார்.

‘லேப்டாப் கொடுக்கவில்லை’ என்று புகார் சொன்ன மாணவி : டெண்டர் எடுத்தவன் மேல் பழியைப் போட்ட வைத்திலிங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பரப்புரை முடிய இன்னும் சில நாட்களே இருப்பதால் பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறிவருகிறது. இதனால் தோல்வி பயத்தில் இருக்கும் அ.தி.மு.க தேர்தல் பரப்புரைகளில், அரசு அதிகாரிகளின் உதவியோடு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரம் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், பிரச்சாரம் செய்ய முடியாமல் வதித்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.தி.மு.க வேட்பாளர் வைத்திலிங்கம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அ.தி.மு.க அரசுதான் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தது என பேசினார். அப்போது கூட்டத்திலிருந்த மாணவி ஒருவர் ‘நான் 2017 -19ம் கல்வியாண்டில் படித்தேன். எனக்கு லேப்டாப்பும், பணமும் கொடுக்கவில்லை' என கேள்வி எழுப்பினார்.

திடீரென மாணவி கேள்வி எழுப்பியதால், வேட்பாளர் வைத்திலிங்கம், 'லேப்டாப் டெண்டர் எடுத்துவர்கள் சரியாக கொடுத்திருக்க மாட்டர்கள்' என அவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, உடனே பேச்சை மாற்றிவிட்டார். வைத்திலிங்கத்தின் இந்த மழுப்பலான பதிலைக் கேட்டு மாணவியும், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

banner

Related Stories

Related Stories