தி.மு.க

“தமிழகத்தை மேம்படுத்த மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய தொழில் புரட்சி” : மகுடம் சூடிய தி.மு.க-10

2006ஆம் ஆண்டு இந்த முதலீடு ரூ.1,73,529 கோடியாக உயர்ந்தது. இதே முதலீடு தி.மு.க ஆட்சியில் 2008ஆம் ஆண்டு ரூ.3,48,704 கோடியாக உயர்ந்து சாதனை படைத்தது.

“தமிழகத்தை மேம்படுத்த மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய தொழில் புரட்சி” : மகுடம் சூடிய தி.மு.க-10
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேர்தல் மூலம் பொதுமக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 25-10-1996 முதல் 8-9-2001 வரை சென்னை மாநகராட்சியின் வணக்கத்துக்குரிய மேயராக பதவி வகித்து சாதனைகள் பல புரிந்தார் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதேபோல் சென்னை மாநகர மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறை 25-10-2001 முதல் 18-6-2002 வரை சென்னை மாநகராட்சியில் மேயராகவும் அவர் பதவி வகித்தார்.

13-5-2006 முதல் 15-5-2011 வரை தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், 29-5-2009 முதல் 15-5-2011 வரை தமிழக அரசின் துணை முதலமைச்சராகவும் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி வகித்தார். 1989 முதல் தற்போது வரை ஆறு முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 25-10-2016 முதல் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், 28-8-2018 முதல் தி.மு.கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்து வரும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றி வரும் நற்பணிகள் தமிழகத்திற்கு மிகப்பெரிய முன்னேற்றத்தையும் உயர்வையும் அளித்து வருகிறது.

முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் துணை முதலமைச்சராக தலைவர் தளபதி அவர்களும் தமிழ்நாடு அரசு மூலம் இயற்றிய சட்டங்களும் நிறைவேற்றிய திட்டங்களும் தமிழக வளர்ச்சியில் பெறும் பங்கு வகித்தன. அதற்காக சென்னை மாநகராட்சியும் தி.மு.க அரசும் பல தேசிய விருதுகளையும், பரிசுகளையும் பன்னாட்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றன.

மெட்ரோ ரயில் திட்டம் போன்ற பல திட்டங்கள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது முயற்சியால் நிறைவேற்றப்பட்டன. ரூபாய் 46,097 கோடி முதலீட்டில் 37 மிகப் பெரிய தொழில் சாலைகளும் 120 நடுத்தர தொழில்சாலைகளும் தமிழகத்தில் ஆரம்பிக்க பட்டன. தமிழ்நாடு அரசின் புதிய தொழில் கொள்கை 5.11.2007 அன்று வெளியிடப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை உருவாக்கி வெளியிடப்பட்டது. அவை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் பெருமை சேர்த்ததோடு தொழில் வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழ் நாட்டிற்கு மாபெரும் வளர்ச்சியை உருவாக்கித் தந்துள்ளன.

தமிழநாட்டில் தொடங்கப்பட்ட பல தொழிற்சாலைகளுக்கு தலைவர் அவர்களே அடிக்கல் நாட்டினார். பணிகள் நிறைவுற்று பல தொழிற்சாலைகளை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தம் திருக்கரங்களால் திறந்து வைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிக்காலின் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 16-11-2004 அன்று முதலமைச்சர் கலைஞர், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.

“தமிழகத்தை மேம்படுத்த மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய தொழில் புரட்சி” : மகுடம் சூடிய தி.மு.க-10

இருங்காட்டுக்கோட்டையில் ரூ.4,000 கோடி முதலீட்டில் தெற்காசியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்ட அதிநவீன டிரிவிட்ரான் மருத்துவ தொழில்நுட்ப பூங்காவை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25-1-2010 அன்று திறந்து வைத்தார்.

சென்னை தரமணியில் டைசல் உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவின் இரண்டாவது பிரிவு 28-8-2009 அன்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரெனால்டு & நிசான் கார் தொழிற்சாலை ரூ.4,500 கோடி முதலீட்டில் 17-7-2008 அன்று சென்னை ஒரகடத்தில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலத்தை 30-8-2009 அன்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ரூபாய் 1,000 கோடி முதலீட்டில் ஆரம்பித்துள்ள தொழில் விரிவாக்கத் திட்டத்திற்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3.11.2009 அன்று அடிக்கல் நாட்டினார். ரூபாய் 612 கோடி முதலீட்டில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் காகிதக்கூழ் உற்பத்தியை அதிகரிக்கும் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தது அந்த தொழிற்சாலையைத் துணை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 3-10-2009 அன்று திறந்து வைத்தார்.

சான்மினா எஸ்.சி.ஐ. அமெரிக்க நிறுவனம் ரூ.225 கோடி முதலீட்டில் 100 ஏக்கர் நிலத்தில் அமைத்த தொழில்நுட்பப் பூங்காவை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 28-3-2010 அன்று தொடங்கி வைத்தார். நோக்கியா சீமென்ஸ் தொழிற்சாலையின் மூன்றாவது தொழில்நுட்பத்துடன் கூடிய (3G) விரிவாக்கத் திட்டத்தினை ஒரகடத்தில் 10-04-2010 அன்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான 1,600 ஏக்கர் நிலத்தில் கூழ்மரச் சாகுபடி செய்வதற்காக தமிழ்நாடு செய்தித்தாள் மேலான்மை இயக்குநருக்கும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் மேலான்மை இயக்குநருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 17-4-2010 அன்று சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

புகலூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ரூ.612 கோடி முதலீட்டிலான தொழில்சாலை மேம்பாட்டு திட்டத்தை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3-10-2009 அன்று தொடங்கி வைத்தார். அத்துடன் அதே விழாவில் ரூ.1,000 கோடி செலவினான ஆலை விரிவாக்க திட்டதிற்கும் அடிக்கல் நாட்டினார்.

சான்மினா எஸ்.சி.ஜி நிறுவனத்தில் அத்தொழிற்சாலை உள்ள பகுதிகளில் இருக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 19 மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை 1-2-2010 அன்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வழங்கினார். டாட்டா இரும்பு தொழிற்சாலை 28-6-2007 அன்று ரூ.2,500 கோடி முதலீட்டில் 80 ஏக்கர் நிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. எம்.பி.பி.எல். தொழிற்சாலை ரூ.1,373 கோடி முதலீட்டில் 532 ஏக்கர் நிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை 2,450 கோடி ரூபாயில் இருங்காட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது. ஹூண்டாய் தொழிற்சாலையின் இரண்டாவது தொழில் நிறுவனம் ரூ.4000 கோடி முதலீட்டில் இருங்காட்டுக் கோட்டையில் 2-2-2008 அன்று திறந்து வைக்கப்பட்டது.

ரூ.2,000 கோடி முதலீட்டில் சிக்நெட் கோலார் தொழிற்சாலையும், ரூ.900 கோடி முதலீட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 270 ஏக்கர் நிலத்தில் எம்.ஆர்.எப்.டயர் தொழிற்சாலையும், DCW நிறுவனத் தொழிற்சாலை தூத்துக்குடியிலும், ரூ.350/- கோடி முதலீட்டில் டூசான் தொழிற்சாலை பிள்ளைப்பாக்கத்திலும் ஆரம்பிக்கப்பட்டன. ரூ.5,472 முதலீட்டில் 7 புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

54,955 தொழில் முனைவோர்களுக்கு ரூ.272 கோடி தொழில் கடன் வழங்கப்பட்டது. 1,40,000 சிறிய தொழிற்சாலைகளுக்கு ரூ.2,813 கோடி முதலீடுகள் வழங்கப்பட்டன. அன்ப்காம்ப் எலக்ட்ரானிக் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. ரூ.694 கோடி முதலீட்டில் பல செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், ரூ.148 கோடி முதலீட்டில் மகேந்திரா மகேந்திரா தொழிற்சாலையும், ரூ.120 கோடியில் சாம்சங் தொழிற்சாலையும் நூறு கோடி செலவில் லைட் தொழிற்சாலையும், ரூ.161 கோடி செலவில் எல்.சி.எம். தொழிற்சாலையும் ஆரம்பிக்கப்பட்டன.

ரூ.350 கோடி முதலீட்டில் ஜெர்மன் நாட்டு தைசான் தொழிற்சாலையும், ரூ.430 கோடி முதலீட்டில் என்.எம்.டயர் தொழிற்சாலையும், ரூ.17,400 கோடி முதலீட்டில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டன. இனர்ஜி ஆட்டோமொபைல் தொழிற்சாலையும், டிக்சான் தொழிற்சாலையும், அலெய்ஆல்பீம் தொழிற்சாலையும் ஆரம்பிக்கப்பட்டன.

ரூ.44 கோடி முதலீட்டில் ரெய்ட்டர் நிட்டோக் தொழிற்சாலையும், ரூ.128 கோடி முதலீட்டில் பிரேக் தொழிற்சாலையும்,. ரூ.1600 கோடி முதலீட்டில் ஜே.கே. டயர்ஸ் தொழிற்சாலையும், ரூ.1600 கோடி முதலீட்டில் வீடியோகான் தொழிற்சாலையும், ரூ.2200 கோடி முதலீட்டில் சுந்தரேஸ்வரர் அலாய் இரும்பு தொழிற்சாலையும், ரூ.1,800 கோடி முதலீட்டில் மகேந்திரா மகேந்திரா கம்பெனியின் புதிய தொழில் சாலை பிரிவும், ரூ.1500 கோடி முதலீட்டில் வின்டர்பைன் தொழிற்சாலையும், ரூ.355 கோடி முதலீட்டில் பேட்டரி தொழிற்சாலையும் ஆரம்பிக்கப்பட்டன.

“தமிழகத்தை மேம்படுத்த மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய தொழில் புரட்சி” : மகுடம் சூடிய தி.மு.க-10

அமெரிக்காவின் மோட்டாரோலா தொழிற்சாலை திருப்பெரும்புதூரில் 2008 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. ரூ.200 கோடி செலவில் டயர் தொழிற்சாலை ஒரகடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் ரூ.1,000 கோடி முதலீட்டில் செடி கண்டக்டர் ஆட்டோமொபைல் தொழிற்சாலை திருப்பெரும்புதூரில் 2009ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

ரூ.250 கோடி முதலீட்டில் டெல் கம்ப்யூட்டர் தொழிற்சாலை 2-2-2008 அன்று துவங்கி வைக்கப்பட்டது. ரூ.300 கோடி முதலீட்டில் லிக் நிறுவனம்

16-7-2008 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக் தொழிற்சாலை ரூபாய் 450 கோடி செலவில் 13-11-2007 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.300 கோடி முதலீட்டில் தி ஒரகடம் பகுதியில் வாகன உற்பத்தி தொழிற்சாலை 5-10-2007 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. டாட்டா ஸ்டீல் தொழிற்சாலை தூத்துக்குடியில் 80 ஏக்கரில் ரூ.2,500 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

2006 முதல் 2010 வரை திமுக ஆட்சியில் 5744 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.76.71 கோடி மானியம் வழங்கப்பட்டது. ஜே.கே.டயர்ஸ் நிறுவனம் ரூ.1500 கோடி முதலீட்டில் தனது டயர் தயாரிப்பு தொழிற்சாலையை ஸ்ரீபெரும்புதூரில் ஆரம்பித்தது.

திருபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இரும்பு தொழிற்சாலை ரூ.2,500 கோடி முதலீட்டில் 50 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டது. எம்.பி.பி.எல் எரிசக்தி நிறுவனம் செங்கல்பட்டில் 532 ஏக்கர் நிலத்தில் ரூ.1,373 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

ஜப்பான் வாகன தொழிற்சாலை மற்றும் அசோக் லேலண்ட் இணைந்து உருவாக்கும் நடுத்தர கனரக வணிக வாகன தொழிற்சாலை 4,250 கோடி முதலீட்டில் 400 ஏக்கர் நிலத்தில் பிள்ளைப்பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. எண்ணெய் துரப்பண தொழிற்சாலை, மிதவை கண்ணாடி தொழிற்சாலை போன்ற பல தொழிற்சாலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த கனரக பொறியியல் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனத்தின் புதிய விரிவாக்கத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. சேலம் இரும்பு தொழிற்சாலை ரூ.2,500 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது. சிலிகான் பிலிம் தொழிற்சாலை திருப்பெரும்புதூரில் 17-3-2008 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஹர்ஷா குழுமத்தின் கண்ணாடித் தொழிற்சாலை, எரிவாயு கிணறு தோண்டும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியன பிள்ளைப் பாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கேட்டர்பில்லர் தொழிற்சாலை ரூ.800 கோடி முதலீட்டில் 2009ஆம் ஆண்டு திருவள்ளூர் மற்றும் ஒரகடம் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது. மோசர்பியர் நிறுவனத்தின் போட்டோ வேல்டாய்க் தொழில்நுட்பத் தொழிற்சாலை ரூ.2,000 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. நோக்கியா சீமென்ஸ் தொழிற்சாலை ரூ.300 கோடி முதலீட்டில் ஒரகடத்தில் அமைக்கப்பட்டு 16-10-2008 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஹேன்சன் டிரான்ஸ்மிஷன்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் செப்டம்பர் 2008 திறந்து வைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான், பல்லடம், நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஏ.டி.சி. டயர்ஸ் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. டெய்ம்லர் ஏஜி மற்றும் ஹீரோ நிறுவனத்தின் வணிக வாகன உற்பத்தி தொழிற்சாலை ஒரகடத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் 397 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் ரூ.3,500 கோடி செலவில் கப்பல் கட்டுமானம் மற்றும் சிறு துறைமுகம் ஏற்படுத்தப்பட்டது. கோயம்புத்தூரில் ரூ.370 கோடி முதலீட்டில் டைடல் பூங்கா ஆரம்பிக்கப்பட்டது சிறு தொழிற்சாலைகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் (டான்சி) துவங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு ஏக்கரில் ரூ 100 கோடி முதலீட்டில் 2008ஆம் ஆண்டு தொழில் வளர்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது. மதுரை திருமங்கலத்தில் 1,478 ஏக்கரிலும், தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தாலுகாவிலும், தொழிற்பேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டன. மத்திய அரசின் தொழில் துறை அமைச்சகம் (M.S.M.E.) மூலம் 57,902 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட ரூ.5,872 கோடி முதலீடாக 2010-2011ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 94 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு தொழிற்பேட்டையிலும் ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அதேபோல தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (சிப்காட்) மூலமாக பல தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு தொழிற்பேட்டையிலும் ஏராளமான தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக, மகளிர் தொழில் முனைவோருக்கு உதவிடும் வகையில் மகளிர் தொழில் பூங்காங்கள் பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டன. பொதுவாக அமைக்கப்பட்ட ஒவ்வொரு தொழிற்போட்டை வளாகங்களிலும் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு 30 சதவீத இடங்களும் வாய்ப்புகளும் பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டன. 2006-2007 ஆம் ஆண்டு நிலக்கோட்டையில் உணவு பூங்கா அமைக்கப்பட்டது. இருங்காட்டுக் கோட்டையில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்பட்டது. 2010-இல் சிப்காட் மூலம் 12 மாவட்டங்களில் 19 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு 16,724 ஏக்கர் நிலத்தில் 1,803 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

“தமிழகத்தை மேம்படுத்த மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய தொழில் புரட்சி” : மகுடம் சூடிய தி.மு.க-10

தி.மு.க ஆட்சியில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் மூன்றாவது தலைசிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கியது. 1996ஆம் ஆண்டு ரூ.90,650 கோடியாக இருந்த அன்னிய முதலீடு 2001-ஆம் ஆண்டு ரூ.1,57,903 கோடியாக அதிகரித்தது 2006ஆம் ஆண்டு ரூ.1,73,529 கோடியாக இருந்த அன்னிய முதலீடு 2008 திமுக ஆட்சியில் ரூ.3,48,704 கோடியாக உயர்ந்தது. சிறப்பு பொருளாதார மண்டலம் இருங்காட்டுக்கோட்டையில் 153 ஏக்கர் நிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டது. ஜவுளி உற்பத்தியில் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்கியது. தமிழ்நாட்டில் 3,50,000 மின்தறிகள் இயங்கின. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் 30 சதவீத துணிகள் தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்றன. ஜவுளி உற்பத்தியில் திருப்பூர் மிகச் சிறந்து விளங்கிறது. கார் உற்பத்தியில் சென்னை மிகச் சிறந்து விளங்குகிறது. காகித உற்பத்தியிலும், சிமெண்ட் உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னணி வகித்தது. பெரிய நகரங்களில் மட்டுமல்ல பின்தங்கியுள்ள தென்மாவட்ட பகுதிகளிலும் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்புகளும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டது.

1996ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 6,993 தொழிற்சாலைகள் இருந்தன. 2010ஆம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் 40,515 தொழிற்சாலைகள் இயங்கின. இது மிகப்பெரிய சாதனை ஆகும். இந்தியாவிற்கான கார் தேவையில் 40 சதவீத கார்கள் தமிழ்நாட்டில் உள்ள போர்டு ஹீண்டாய் நிசான் ரெனால்ட் மிட்சுபிஸி போன்ற கார் தொழில்சாலைகளால் தயாரித்து வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 12,80,000 கார்கள் மற்றும் 3,50,000 வணிக வாகனங்களும் உற்பத்தி செய்து வழங்கப்பட்டன. பயணிகள் வாகன உற்பத்தி 27 சதவீதம் அதிகரித்தது.

தமிழக அரசு பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

ரூ.1,56,893 கோடி ரூபாய் முதலீடு பெற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது என்று 22-5-2000 இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கணித்துகூறி தமிழக அரசை பாராட்டியது.

6-7-1998 அன்று வெளிவந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக பாராட்டு தெரிவித்தது.

28-4-1999 அன்று வெளிவந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் நிறுவப்படுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று பாராட்டி எழுதியது. 1997 ஏப்ரல் எக்னாபிக்ஸ் டைம்ஸ் பத்திரிகை சென்னை இந்தியாவின் டெட்ராய்ட் ஆக உள்ளது என்று பாராட்டி எழுதியது. 7-2-2000 அன்று வெளிவந்த எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை இந்தியாவில் பெரிதும் தொழில் மையப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று பாராட்டி எழுதி உள்ளது.

2009 ஆம் ஆண்டு சிறந்த செயல்பாட்டிற்காக தமிழக அரசின் கனிமம் மற்றும் சுரங்கத்துறை இந்தியாவின் முதல் தரமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. 2009 ஆம் ஆண்டு 39 முதல் பரிசுகளையும் 22 இரண்டாம் பரிசுகளையும் மற்றும் சில பரிசுகளையும் தமிழ்நாட்டு அரசின் வணிக துறை பெற்றது. 2010ஆம் ஆண்டு இந்தியாவின் மிகச் சிறந்த நிறுவனமாக தமிழக அரசின் கனிமம் மற்றும் சுகாதாரத்துறை அறிவிக்கப்பட்டு அதற்கான விருது வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது. சிறந்த சுரங்க பராமரிப்பிற்கான விருது 4-2-2010 அன்று தமிழக அரசிற்கு வழங்கப்பட்டது.

1989-1991 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் 4.1 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி திமுக ஆட்சியில் 2010-2011 ஆம் ஆண்டில் 15.2 சதவீதமாக உயர்ந்தது மிகப்பெரிய சாதனையாகும். சிறு, குறு தொழில் வளர்ச்சி 1989-1991 திமுக ஆட்சியில் 7.70 சதவீதமாக இருந்தது. பின்னர் இது 2010-2011ல் திமுக ஆட்சியில் 18.05 சதவீதமாக உயர்ந்தது.

2008-2009இல் தமிழகத்தில் 1,683 மென்பொருள், வன்பொருள் தொழிற்சாலைகள் ரூ.36,680.40 கோடி அளவு ஏற்றுமதி செய்தன. தமிழகத்தின் ஏற்றுமதி 29.04 சதவீதமாக உயர்ந்தது. இந்த ஏற்றுமதியில் 40 சதவீதம் மென்பொருள்கள் ஆகும். தொழில்துறையில் 1996 ஆம் ஆண்டு ரூ.90,650 கோடி முதலீடு செய்யப்பட்டது. 2001ஆம் ஆண்டு இந்த முதலீடு ரூ.1,57,903 கோடியாக உயர்ந்தது. 2006ஆம் ஆண்டு இந்த முதலீடு ரூ.1,73,529 கோடியாக உயர்ந்தது. இதே முதலீடு திமுக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு ரூ.3,48,704 கோடியாக உயர்ந்து சாதனை படைத்தது.

- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

Related Stories

Related Stories