தமிழ்நாடு

தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் தேடப்படும் குற்றவாளி பா.ஜ.க பெண் தாதா : கண்டுகொள்ளாத புதுவை காவல்துறை!

காரைக்காலில் தொழிலதிபரை மிரட்டியதாகத் தேடப்பட்டு வரும் பெண் தாதா எழிலரசி, தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் தேடப்படும் குற்றவாளி பா.ஜ.க பெண் தாதா : கண்டுகொள்ளாத புதுவை காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம், புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தற்போது தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிமுகம் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. இதையடுத்து காரைக்காலில் தொழிலதிபரை மிரட்டியதாகத் தேடப்பட்டு வரும் பெண் ரவுடி எழிலரசி தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெண் தாதா எழிலரசி மீது தமிழகம், புதுச்சேரியில் கொலை, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், சொத்து அபகரிப்பு, வெடிகுண்டு வழக்குகள் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாகவும் எழிலரசி உள்ளார்.

தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் தேடப்படும் குற்றவாளி பா.ஜ.க பெண் தாதா : கண்டுகொள்ளாத புதுவை காவல்துறை!

சமீபத்தில், பெண் ரவுடி எழிலரசி, தொழிலதிபரை மிரட்டி மதுபான கடையை எழுதி வாங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கில், இவரைக் காரைக்கால் மாவட்ட தனிப்படை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் எழிலரசி பா.ஜ.கவில் இணைந்தார். பிறகு மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து, காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் தொகுதியில், தாம் போட்டியிடுவதாகவும், மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கூறி பெண் ரவுடி எழிலரசி பிரச்சாரம் செய்து வருகிறார்.

தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் தேடப்படும் குற்றவாளி பா.ஜ.க பெண் தாதா : கண்டுகொள்ளாத புதுவை காவல்துறை!

மேலும் தாம் வெற்றி பெற்றால் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையின மக்களுக்கு புதிய திட்டங்களைக் கொண்டு வருவேன் என்று 5 திட்டங்கள் கொண்ட நோட்டீசை எழிலரசியின் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

போலிசாரால் தேடப்பட்டு வரும் பெண் ரவுடி எழிலரசி எப்படித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடிகிறது ? என்றும் போலிஸார் அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்து வருவதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories