தமிழ்நாடு

கிரைண்டர் கல்லைப் போட்டு மூதாட்டி கொலை... சரணடைந்த நபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

சென்னை அருகே மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரைண்டர் கல்லைப் போட்டு மூதாட்டி கொலை... சரணடைந்த நபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கிற நவரத்தின மணி. இவர் தான் ஒரு மூதாட்டியை கொலை செய்துவிட்டதாக குன்றத்தூர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலிஸார், கொலை நடந்த குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு வீட்டில், மூதாட்டி ஒருவர் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் போலிஸார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், இதுகுறித்து சரணடைந்த மணியிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவர் மலர்க்கொடி. அவரது கணவர் பெயர் அகத்திலகம். இவர்களுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அகத்திலகம் தனது வீட்டிற்கு உள்ளேயே தியானம் செய்வதற்கு தனியாக அறை அமைத்துள்ளார். மேலும் தீராத வியாதிகளுக்கு மூலிகை இலைகளைப் பறித்து அதனை அரைத்து மருந்தாகக் கொடுத்து சிலருக்கு நோயையும் குணப்படுத்தியுள்ளார்.

அதேபோல மணியும் அகத்திலகத்திடம் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளார். மனைவியை பிரிந்து சென்ற நிலையில் தனியாக இருந்த அகத்திலகத்திற்கு மணி உதவியாக இருந்ததோடு, அவரிடம் சீடராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் 2014ஆம் அகத்திலகம் உயிரிழந்துவிட்டார். அப்போது முதல் அகத்திலகத்தின் வீட்டை மணி பராமரித்து வந்துள்ளார். இதையறிந்து அகத்திலகத்தின் மனைவி மலர்க்கொடி, சில மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டை வேறொரு நபருக்கு 25 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதனால், மணிக்கும், மலர்க்கொடிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் போலிஸார் பலமுறை சமரசம் செய்து வைத்துள்ளனர்.

பின்னர் வீட்டை வாங்கியவர்கள் அங்கிருந்த தியான மற்றும் பூஜை அறைகளை இடித்துவிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணி தனது குருநாதர் வாழ்ந்த வீட்டை இடித்துவிட்டதாலும், அந்த வீட்டை குருநாதரின் கோயிலாக மாற்ற நினைத்து முடியாமல் போன ஆத்திரத்தாலும், குடிபோதையில் வீட்டிற்கு சென்று, படுத்திருந்த மலர்க்கொடியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்ததாக போலிஸார் விசாரணை தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories