தமிழ்நாடு

“கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகளை அடகு வைத்த பச்சைத்துண்டு போட்ட பச்சைத் துரோகி பழனிசாமி” - கனிமொழி சாடல்!

விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடிமையாக அடகு வைத்த பச்சைத்துண்டு போட்ட பச்சைத்துரோகி பழனிச்சாமி என மதுரையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தின் போது சாடியுள்ளார் கனிமொழி எம்.பி.

“கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகளை அடகு வைத்த பச்சைத்துண்டு போட்ட பச்சைத் துரோகி பழனிசாமி” - கனிமொழி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தில் முதல் நாள் பரப்புரை நேற்று நடைபெற்றது. அதில், மதுரை ஜீவா நகர் மேற்கு பகுதி பொறுப்பாளர் முருகானந்தம் தலைமையில் மாநகர் தெற்கு பொறுப்பாளர் கோ. தளபதி, மத்திய சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-

“விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பரப்புரை வழியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. காலையிலிருந்து மதுரை பகுதியில் இருக்கக்கூடிய இரண்டு தொகுதிகளில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். ஒன்றே ஒன்று மிகத் தெளிவாக தெரிகிறது. தமிழகம் தயாராகிவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது தேர்தல் வரும், இங்கே இருக்கக்கூடிய திறமையற்ற, கையாலாகாத இந்த ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை மறுபடியும் ஆட்சிப்பொறுப்பில் கொண்டுவர வேண்டும், தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக காண வேண்டும் என தமிழ்நாடு காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பட்டிருக்கக்கூடிய பாடுகளை சொல்லி மாளாது. ஆனாலும் பத்திரிகைகளை திறந்தால் வெற்றி நடைபோடும் தமிழ்நாடு, வெற்றி நடைபோடும் தமிழகம் என தொலைக்காட்சிப் பெட்டியிலும் விளம்பரம் பொய் பரப்புரையை, பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து தினமும் செய்தித்தாள்களில் தொழில் முதலீடு வேலைவாய்ப்புகளை பற்றி, தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகளைப் பற்றி வெளியிட்டுள்ளனர். இத்தனை முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து இருந்தால் ஏன் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை, யாராவது சொல்ல முடியுமா உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு 10 ஆண்டுகளில் வேலை கிடைத்துள்ளதா? தொழில் முதலீடு கொண்டு வந்தது எல்லாம் இவர்களுக்கு தொழில் முதலீடு கொண்டு வந்துள்ளார்கள். இவர்கள் சம்பாதிப்பது தொழில் முதலீடு என்று கணக்கு காட்டுகிறார்களா என்று தெரியவில்லை. பொய் பித்தலாட்டம்தான் இந்த ஆட்சி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகின்றேன். இந்த ஆட்சியின் விளம்பரம் இந்த ஆட்சியை மக்கள் எப்படி எடை போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணம். ஒரு முதலமைச்சர் ஜல்லிக்கட்டுக்கு வருகிறார் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அவர் எழுதிய கடிதம் அவரது பரிசுப்பொருட்கள் எல்லாத்தையும் மிக பத்திரமாக வைத்திருந்து முப்பது நாற்பது வருடங்கள் கழித்து காத்திருக்கின்றனர். ஒரு முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் விஜயன் என்ற இளைஞருக்கு 8 மாடுகளை பிடித்து வெற்றி பெற்ற இளைஞருக்கு பரிசு கொடுக்கிறார். ஒரு முதலமைச்சர் கொடுத்த பரிசு என்ன செய்ய வேண்டும் மிகப் பத்திரமாக வீட்டில் வைத்து பெட்டியில் வைத்து பூட்டி வைத்து, அடுத்த தலைமுறைக்கு காட்ட அடுத்தடுத்த தலைமுறைக்கு முதலமைச்சர் கொண்டு வந்து கையில் கொடுத்த பரிசு என்று பத்திரமாக வைத்து இருப்போம். ஆனால் விஜயன் அப்பா முதல்வரைப் பற்றி தெரிந்து நான்கு தங்கக் காசுகளை எடுத்து சென்று தங்கமா வைரமா என உரசிப் பார்த்தால், தெளிவாக தெரிந்தது தங்கம் அல்ல தகரம்தான். யார் மாதிரி, முதலமைச்சர் மாதிரியே, இந்த ஆட்சியைப் போலவே அந்த பரிசும் தங்கம் இல்லை தகரம் என்று தெரிந்து விட்டது.

நான் கேட்கிறேன் ஒரு முதலமைச்சர் கொடுத்த பரிசிலேயே சாதாரண சாமானிய மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் எப்படி தொழில் முதலீடு , தமிழ்நாட்டுக்கு வரும் எப்படி இவர்களை நம்பி, ஆட்சியில் இருப்பவர்களை நம்பி புதிய தொழிற்சாலைகள் எப்படி வரும், வேலை வாய்ப்பு கிடைக்கும், இப்படிப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் தான் யாருமே இங்கு தொழில் முதலீடுகள் செய்ய தயாராக இல்லை தலைவர் கலைஞரிடம் உறுதிமொழி கொடுத்தார்கள் அடுத்தகட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில்தான் என்று உறுதி கொடுத்தவர்கள் வேறு மாநிலத்திற்கும் வேறு நாட்டிற்கு தொழிற்சாலைகள் தொடங்க கூடிய ஒரு நிலை வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விட்டது. அதனால் விரைவிலேயே இந்த ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். மீண்டும் திமுக ஆட்சி உருவாகும். தலைவர் கலைஞர் அவர்கள் எப்படி தொழில்களை உருவாக்கி முதலீடுகளை கொண்டுவந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். அதேபோல தளபதி அவர்களும் வேலை வாய்ப்புகளை நம்முடைய படித்த இளைஞர்களுக்கு இளம்பெண்களுக்கு உருவாக்கித் தருவார்கள் என்ற உறுதியை நான் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் தான் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. அடுக்கிக்கொண்டே போக முடியும். மதுரையைச் சுற்றி சுற்றுச்சாலை காக்க, தளபதி அவர்கள் தான் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்திக் காட்டினார். தளபதி அவர்கள் துணை முதல்வராக இருந்தபோதுதான் இங்கு இருக்கக்கூடிய மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டது. திமுக ஆட்சியில் தான் பல மேம்பாலங்கள், செல்லூரில் கூட மேம்பாலம் கட்டப்பட்டது. திமுகவில் தான் வைகை ஆற்றில் பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் மேம்பாலம் என சொல்லிக்கொண்டே போகலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மதுரையில் உயர்நீதிமன்ற கிளை உருவாக்கி காட்டியது தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் தான். மதுரை நகரை அழகுபடுத்த ஆயிரத்து 500 கோடி வழங்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு பல பணிகள் நடைபெற்றது. தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில் தான் இப்படி அடுக்கிக்கொண்டே போக கூடிய அளவிற்கு ஆட்சி சாதனைகளை செய்து காட்டி இருக்கிறோம்.

மற்ற அறிவிப்புகளை விட்டு விடுகிறோம். 110 விதியில் நீங்கள் அறிவித்த அறிவிப்புகள் என்ன ஆச்சு என்பது மட்டும் பதில் சொல்லுங்கள். மூன்று திட்டம் போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்த தல்லாகுளத்தில் இருந்து அரசரடி வரை பறக்கும் பாலம் நிதி 700 கோடி என்ன ஆனது என்று பதில் சொல்லுங்கள். தூர்வாரி கழித்து வருகிறேன் என்று சொல்லி பேப்பரில் தூர்வாரி விட்டு பேப்பரில் கணக்கு மட்டும் எழுதிவிட்டு தூர்வார மாட்டீர்கள். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப் போல தமிழ் தாய்க்கு 100 கோடியில் சிலை என்றீர்கள் தலைவர் அவர்கள் குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை உருவாக்கி காட்டியவர். இன்று சில வைக்கிறேன் தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கிறேன் என்று நீங்கள் அறிவித்தீர்கள் அறிவித்து பல ஆண்டுகள் ஓடிவிட்டது. அந்த சிலை என்ன ஆயிற்று எல்லாத்துக்கும் இந்த ஆட்சியில் அடிக்கல் நாட்டுவர்கள் இல்லையென்றால் அறிவிப்பு செய்வார்கள் அது இரண்டு முடிந்துவிடும் அதற்கு மேலே எந்த திட்டமும் நகராது. அதே போல தான் எய்ம்ஸ்க்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமரை எல்லாம் அழைத்து வந்து அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தக் கல் அப்படியே இருக்கிறது. அடுத்த கல் எடுத்து வைக்கப்படவில்லை. அதே நேரத்தில் அடிக்கல் நாட்டு விழா ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்டது. பிள்ளைகள் படிக்க ஆரம்பித்து விட்டனர். இங்கு திட்டம் செயல்படுத்தப்பட வில்லை.

எந்த திட்டமாக இருந்தாலும் முதல்வர் தளபதியை பார்த்துச் சொல்கிறார் அறிக்கை நாயகன் என்று அவருடைய அறிக்கைகள் வரவில்லை என்றால் இந்த ஆட்சியில் நடக்கக்கூடிய ஒரு சில விஷயங்களும் நடக்காது. அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று அறிக்கை விடுத்து, தளபதி போராட்டம் நடத்தி ஆளுநரை கையெழுத்திட வைத்தார். மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது அவர்கள் படிக்க தனியார் கல்லூரிகளில் படியுங்கள் என்றும் 600020 என்று சொல்லக்கூடிய நிலை வந்த போது நீங்கள் கட்டவேண்டாம் திமுக அந்த கட்டணத்தை கட்டும் என்று அறிவித்த பிறகுதான் அரசாங்கமே இல்லை இல்லை நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள். இந்த அறிவிப்பை அறிக்கையை தளபதி வெளியிடவில்லை என்றால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் என்னாவது அதேபோல விவசாய கடனை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்கிறோம் என்று தளபதி அவர்கள் அறிக்கை விடுகிறார் உறுதிமொழியை தருகிறார். அதன்பிறகு சில தினங்களுக்கு முன்பாக விவசாயிகள் கடனை ரத்து செய்கிறோம் என்கிறார் தளபதி. இந்த ஆட்சியில் உருப்படியான ஒரு சில விஷயங்களும் நடக்காது. 5000 கொடுங்கள் என்றால் 2500 வழங்கியிருக்கிறார்கள்.

தங்களை காப்பாற்ற ஆட்சியைக் காப்பாற்ற சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் சட்டங்களாக இருக்கட்டும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் ஆக இருக்கட்டும் தமிழ் மொழிக்கு தமிழர்களின் அடையாளங்களுக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வந்தாலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நம்முடைய அடையாளங்களை அழிக்க கூடிய இந்த மக்களுக்கு விவசாய மக்களுக்கு துரோகம் செய்யக் கூடிய சட்டங்களை வரவேற்கிறேன் என்று சொல்லக் கூடியவர்கள் தான் இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய பழனிச்சாமியும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயி விவசாயி என்று பெருமையாகச் சொல்லக்கூடிய விவசாயிகளுக்கு எதிராக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 70 நாட்களுக்கு மேலாக அவர்கள் விவசாயிகளை இவர்கள் விவசாயிகளால் சட்டங்களை ஆதரிக்கிறோம் என்று விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடிமையாக அடகு வைத்த பச்சை துண்டு போட்டு பச்சைத் துரோகி பழனிச்சாமி தேர்தல் வந்தவுடன் சொல்கிறார்.” இவ்வாறு பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories