தமிழ்நாடு

“எங்கள் நாட்டை பற்றி பேச கூடாது என கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது” : விஜூ கிருஷ்ணன் சாடல்!

நமது நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து மற்றவர்கள் பேசும் போது, எங்களது நாட்டை குறித்து பேச கூடாது என கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என விஜூ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“எங்கள் நாட்டை பற்றி பேச கூடாது என கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது” : விஜூ கிருஷ்ணன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 70 நாட்களாக தொடர் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர். ஆனாலும் தற்போது வரை பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இல்லை.

இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெரும் வரை, தடியடி நடத்தினாலும், கண்ணீர் குண்டு வீசினாலும், பொய் வழக்கு போட்டாலும் விவசாயிகள் போராட்டம் தொடரும் என அகில இந்திய விவசாயிகள் சங்க இணை பொதுச்செயலாளரும், டெல்லி போராட்ட குழுவின் இணை ஒருங்கிணைப்பாளருமான விஜூ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தென் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில், அகில இந்திய விவசாயிகள் சங்க இணை பொதுச்செயலாளரும், டெல்லி போராட்ட குழுவின் இணை ஒருங்கிணைப்பாளருமான விஜூ கிருஷ்ணன் கலந்துக்கொள்வதற்காக சென்னை வைத்துள்ளார்.

“எங்கள் நாட்டை பற்றி பேச கூடாது என கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது” : விஜூ கிருஷ்ணன் சாடல்!

அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஜூ கிருஷ்ணன், “கொரோன தொற்று காரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு பதிலாக இந்த மூன்று சட்டங்களையும் மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது.

தங்களது உரிமைகளுக்காக கடும் குளிரிலும் போராடும் விவசாயிகளில் இதுவரை 140 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குடியரசு தினத்தன்று நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாத மோடி அரசு, போராட்டம் நடத்தும் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து செங்கோட்டைக்குள் செல்வதற்கு பாதுகாப்பில் தளர்வுகளை அளித்துள்ளனர். இதனால் அரசிற்கு அதரவானவர்கள் செங்கோட்டைக்குள் சென்று வன்முறையில் ஈடுபட்டனர். விவசாயிகள் அறவழியிலேயே போராடி வருகின்றனர்.

“எங்கள் நாட்டை பற்றி பேச கூடாது என கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது” : விஜூ கிருஷ்ணன் சாடல்!

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரபலங்களுக்கு எதிராக கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. உலக அளவில் கவனம் கொள்ளப்படும் பிரச்சனை குறித்து கருத்து சொல்லும் நாம், நமது நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து மற்றவர்கள் பேசும் போது, எங்களது நாட்டை குறித்து பேச கூடாது என கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.

டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு எதிராக அரசால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு மனிதருக்கு இது குறித்து பேச உரிமை உள்ளது. மாநில சுயாட்சிக்காக முன்னின்று போராடும் தமிழ்நாடு மாநில சுயாட்சிக்கு எதிரான இந்த சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும். இந்த மூன்று சட்டங்களை எதிர்த்து சட்டம் இயற்றவேண்டும். மாநில சுயாட்சியை மீட்க வேண்டும்.

அரசியல் கட்சியாக விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக தன்னால் முடிந்த உதவிகளை சட்டப்படி செய்து வருகிறது. ஆனால், அதிகளவிலான மக்களிடம் இந்த சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்ட களத்திற்கு திரண்டு வர வைப்பதே பிரதான தேவையாக உள்ளது.

“எங்கள் நாட்டை பற்றி பேச கூடாது என கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது” : விஜூ கிருஷ்ணன் சாடல்!

போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது தடி அடி நடத்தப்படுகிறது. செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பொய் வழக்குகள் போட்டு மிரட்டுகிறது. பாரதியார் கூறியது போன்று அச்சமில்லை அச்சமில்லை என விவசாயிகள் போராடி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது கல்லெறிகின்றனர். போராட்டத்தை வன்முறையால் கலைக்க முயற்சி செய்கின்றனர். நாடுமுழுவதும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. தென் இந்தியாவில் இருந்து விவசாயிகள் போராட்ட களம் நோக்கி வந்துகொண்டு உள்ளனர்.

விவசாயம், விவசாயிகளுக்கு எதிரான இந்த மூன்று சட்டங்களை திரும்பப்பெரும் வரை தடியடி நடத்தினாலும், கண்ணீர் குண்டு வீசினாலும், பொய் வழக்கு போட்டாலும், வெற்றி பெறும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும்” என தெரிவித்தார்

banner

Related Stories

Related Stories