தமிழ்நாடு

17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது!

திருப்பூர் அருகே 12ம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகரை போலிஸார்போக்ஸோ சட்டத்தில் கைது.

17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ் (37). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் அப்பகுதியின் பா.ஜ.க பிரமுகர் ஆகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இவரது வீட்டின் அருகே குடியிருந்து வரும் 12வது படிக்கும் 17 வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார்.

கோரோன காலத்தில் பள்ளிகள் விடுமுறையில் இருந்த காரணத்தால் இவர் வேலை பார்க்கும் பனியன் நிறுவனத்தில் அந்த சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார் இதையடுத்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories