தமிழ்நாடு

“நான் BJP ஆளு; அமித்ஷா பி.ஏவுக்கு போன் அடிச்சா மதக்கலவரம்தான்” - சிக்கன் ரைசுக்கு காசு கேட்டதால் மிரட்டல்

மதக்கலவரம் செய்வோம் என சிக்கன் ரைஸுக்கு காசு கேட்ட உணவக உரிமையாளரை மிரட்டிய பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“நான் BJP ஆளு; அமித்ஷா பி.ஏவுக்கு போன் அடிச்சா மதக்கலவரம்தான்” - சிக்கன் ரைசுக்கு காசு கேட்டதால் மிரட்டல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசின் பாஜக தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மதத்தை அடிப்படையாக கொண்டு பல வழிகளில் கலவரங்கள், சச்சரவுகள் நடைபெற்று வருகிறது.

இதனை திரைமறைவில் இருந்து இயக்கிவிட்டு தெரியாதது போன்று பாஜக அரசும் பாசாங்கு செய்து வருகிறது. அதேப்போன்ற உத்தியை தமிழகத்திலும் செயல்படுத்திட வேண்டும் என்பதற்காக மாநிலத்தில் உள்ள ஏராளமான ரவுடிகளை தங்கள் கட்சிக்குள் இணைத்துக்கொண்டு அவ்வப்போது அராஜகங்களை மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள துரித உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்த பாஜக நிர்வாகி ஒருவர், அமித்ஷாவின் பி.ஏவுக்கு ஃபோன் செய்து மதக்கலவரம் செய்ய வைப்பேன் என உணவக உரிமையாளரை பகிரங்கமாக மிரட்டியுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, BJP திருவல்லிக்கேணி மேற்கு தொகுதி செயலாளர் பாஸ்கர் மற்றும் BJP திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் புருஷோத்தமன் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, ட்விட்டரில் #ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதுமட்டுமல்லாமல், சிக்கன் ரைஸுக்காக 1000 பேர் தயாராக இருக்கிறார்கள் மதக்கலவரம் வெடிக்கும் என பாஜக நிர்வாகியே மிரட்டல் விடுப்பது இது போன்ற மதவாத சங்கிகளால் வரவிருக்கும் ஆபத்து இதன் மூலம் பட்டவர்த்தனமாகியுள்ளது என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories