தமிழ்நாடு

“தி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்டால் ரூ.2500 வழங்கமாட்டோம்” : நரிக்குறவர் சமூக மக்களை மிரட்டும் அ.தி.மு.க!

“தி.மு.க நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டால், பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கமாட்டோம்” என நரிக்குறவர் சமூக மக்களை ஆளும் கட்சியினர் மிரட்டுவதாக நரிக்குறவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

“தி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்டால் ரூ.2500 வழங்கமாட்டோம்” : நரிக்குறவர் சமூக மக்களை மிரட்டும் அ.தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டால் அரசு வழங்கும் பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கமாட்டோம் என நரிக்குறவர் சமூக மக்களை அமைச்சர் மா.பா.பாண்டியராஜனின் உதவியாளர்கள் மிரட்டுவதாக மக்கள் கிராம சபையில் நரிக்குறவர்கள் புகார் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் ஆவடி.சா.மு.நாசர் தலைமையில் ஆவடி கிழக்கு மாநகர பொறுப்பாளர் பேபி.சேகர் ஏற்பாட்டில் திருமுல்லைவாயில் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடை பெற்றது.

இந்த கூட்டத்திற்கு 200 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் காலணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆவடி.சா.மு.நாசர் பொங்கல் பரிசாக தண்ணீர் குடங்களை வழங்கினார். அப்போது பேசிய நரிக்குறவர் சமூகத்தினர், “தி.மு.க நடத்தும் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டால் அரசு வழங்கும் பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கமாட்டோம் என அமைச்சர் மா.பா.பாண்டியராஜனின் உதவியாளர்கள் மிரட்டுவதாக குற்றம்சாட்டி புகார் தெரிவித்தனர்.

“தி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்டால் ரூ.2500 வழங்கமாட்டோம்” : நரிக்குறவர் சமூக மக்களை மிரட்டும் அ.தி.மு.க!

எம்.ஜி.ஆர்.சினிமாவில் மட்டுமே பாடல்கலை பாடினார். ஆனால் எங்கள் சமூகத்திற்கு அதிகம் உதவி செய்தவர் கலைஞர் தான் என்றும் இனி நரிக்குறவர் சமூக வாக்குகள் தி.மு.கவிற்குதான் என பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், “பொங்கல் பரிசான 2500 ரூபாயை நரிக்குறவர் சமூகத்திற்கு வழங்க வில்லையெனில், அ.தி.மு.க விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்தார்.

பின்னர் அ.தி.மு.க ஆட்சியை நிராகரிப்போம் என முழக்கங்கள் எழுப்பி, “அ.தி.மு.கவை நிராகரிப்போம்” என்ற பதாகையில் கையொப்பம் இட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஜெ.ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories