இந்தியா

புத்தாண்டு பிறந்த போது மோடிக்கு எதிராக கோஷமிட்ட விவசாயிகள்.. 37வது நாளாக தொடரும் போராட்டம்!

2021ம் ஆண்டை வரவேற்று டெல்லியின் தேசிய நெடுஞ்சாலைகளில் பட்டாசு வெடித்து விவசாயிகள் மகிழ்ந்தனர்.

புத்தாண்டு பிறந்த போது மோடிக்கு எதிராக கோஷமிட்ட விவசாயிகள்.. 37வது நாளாக தொடரும் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ள விவசாய விரோத சட்டங்களான வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 37வது நாளாக தொடர்கிறது.

நேற்று முன் தினம் மத்திய அரசின் அழைப்பின் பேரில் நடைபெற்ற 6ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதன் காரணமாக சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 2021ம் ஆண்டு பிறந்ததை அடுத்து நள்ளிரவு 12 மணிக்கு டெல்லியின் தேசிய நெடுஞ்சாலைகளில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற விவசாயிகள், மோடி அரசுக்கு எதிரான கோஷங்களையும் இட்டனர்.

மேலும், வருகிற ஜனவரி 4ம் தேதி நடைபெற இருக்கும் பேச்சு வார்த்தையின் போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முன்வரவேண்டும் என விவசாய சங்கங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, அதற்கு மாற்றாக வேறு எந்த முடிவையும் ஏற்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories