தமிழ்நாடு

பாஜகவை எதிர்ப்பது போல் நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறது அதிமுக அரசு - மனுஷ்யபுத்திரன் கடும் சாடல்!

ஆட்சியை தக்க வைக்க அதிமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயளாலர் மனுஷ்ய புத்திரன் கூறியுள்ளார்.

பாஜகவை எதிர்ப்பது போல் நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறது அதிமுக அரசு - மனுஷ்யபுத்திரன் கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாஜகவை திட்டுவது போல நடித்து அவர்கள் காட்டும் இடங்களில் கைரேகை இடும் அரசு தான் எடப்பாடி அரசு என்றும் பாஜகவை எதிர்க்கும் அளவிற்கு அதிமுகவிற்கு தைரியம் இல்லை எனவும் மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறார்கள் என திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயளாலர் மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தவல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற மக்கள் கிராம சபை கூட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜெயக்குமார் ஏற்பாட்டில் நடந்த இந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக மாநில தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயளாலர் மனுஷ்யபுத்திரன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்.

அதிமுக அரசின் அவலங்களை பட்டியலிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜகவை திட்டுவது போல நடித்து அவர்கள் காட்டும் இடங்களில் கைரேகை இடும் அரசுதான் எடப்பாடி அரசு என்றும் பாஜகவை எதிர்க்கும் அளவிற்கு அதிமுகவிற்கு தைரியம் இல்லை எனவும் தங்களை ஊழல் வழக்கிலிருந்து காப்பற்றிக்கொள்ளவும், ஆட்சியை தக்கவைக்கவும் அதிமுகவினர் மக்களை ஏமாற்ற நாடகம் போடுகிறார்கள் என்றார். இந்த கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற பதாகையில் கையெழுத்திட்டு பொது மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories