தமிழ்நாடு

“சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அசுர ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி” - துரை முருகன் விமர்சனம்!

உலகத்தில் எங்கும் நடக்காத ஒரு அசுர ஆட்சி இங்கு நடந்து கொண்டிருக்கின்றது என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிமுகவை சாடியுள்ளார்.

“சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அசுர ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி” - துரை முருகன் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு  பகுதியில் நகர திமுக செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது

கிராம சபை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பொதுமக்களிடையே உரையாற்றியதாவது, “இப்போது உள்ள ஆட்சியாளர்கள் 2000 ரூபாய் கொடுத்து விட்டு ஐந்து ஆண்டுகளாக பொது மக்களை ஏமாற்றுகின்றனர். பணத்தை வாங்கிக்கொண்டு ஆட்சியாளர்களை நீங்கள் ஐந்து ஆண்டு ஏமாற்றுங்கள் இதையும் தெரியபடுத்ததான் இந்த கிராம சபை கூட்டம் நடத்துகின்றோம்

இந்த ஆட்சியில் தினந்தோறும் கொலை கொள்ளை செயின் பறிப்பு அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளதா? உலகத்தில் எங்கும் நடக்காத கற்பழிப்புகள், பாலியல் பலாத்காரம் செய்கின்ற அசுர ஆட்சி இந்த எடப்பாடி ஆட்சி.

“சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அசுர ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி” - துரை முருகன் விமர்சனம்!

கவர்னரிடம் திமுக புகார் மனு கொடுப்பதற்கு எந்த அருகதையும் இல்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உள்ளீர்கள். திமுக ஆட்சியில் இதுபோன்று நடந்தது இல்லை. ஆகையால் அந்த யோக்கியதை உங்களுக்கு இல்லை என்று பதிலடி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கசிநாயக்கன்பட்டி பகுதியில் கந்திலி ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக நிராகரிப்போம் தலைப்பில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.

இரு கூட்டத்திலும் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜ், சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி முன்னாள் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட அவைத்தலைவர் முனிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்  தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்

banner

Related Stories

Related Stories