தமிழ்நாடு

“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞருக்கு இணையான இடத்தை பெற்றுள்ளார்” : ஆ.ராசா புகழாரம் !

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞருக்கு இணையான இடத்தை நீங்கள் பெற்றுள்ளதாக தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார்.

“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞருக்கு இணையான இடத்தை பெற்றுள்ளார்” : ஆ.ராசா புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க தலைவர் தளபதியின் காலடியில் சமர்ப்பிக்கப்படும் - நீலகிரியில் நடைபெற்ற "தமிழகம் மீட்போம்" பொதுக்கூட்டத்தில் கழக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் சார்பில், “தமிழகம் மீட்போம்” 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம், தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் 14 இடங்களில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இதில், கழக துணைப்பொதுச் செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா எம்.பி கலந்துகொண்டு பேசுகையில், “பொதுக்கூட்டத்தில், முன்னாள் பேசியவர்கள் நீலகிரி தொகுதிகளை கைப்பற்றுவோம் என கூறியுள்ளனர். இன்றைக்கு இந்திய அரசியலில் தங்களுக்கு இருக்கும் ஆளுமை கண்கூடாக பார்க்கிறோம், தமிழகம் மட்டுமல்ல இந்த நாட்டிற்கே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியாக உள்ளார். ஊழல்கள், முறைகேடுகளை தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.

“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞருக்கு இணையான இடத்தை பெற்றுள்ளார்” : ஆ.ராசா புகழாரம் !

கொரோனா நிவாரணம் உங்களை தவிர யாரும் இந்தியாவில் இவ்வளவு வழங்கியிருக்க வாய்ப்பில்லை. அடுத்த முதல்வர் நீங்கள் தான் என அனைவரும் கூறுகின்றனர்.

கலைஞருக்கு இணையான இடத்தை நீங்கள் பெற்றுள்ளீர் என கூறியவர், வரும் சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று, வெற்றி கனியை தங்களின் காலடியில் சமர்ப்பிப்போம் என கூறினார்.

banner

Related Stories

Related Stories