தமிழ்நாடு

சென்னையில் 1 வாரத்திற்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னையில் இன்று முதல் 30ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று வானம் இருண்டு பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் வெள்ளம் போலக் காட்சியளித்தது.

இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. கார்களும் செல்ல வழியில்லாமல் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் மழைநீர் வடிவதற்கு ஆளும் அ.தி.மு.க அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அரசின் போதாமையையும் அக்கறையின்மையையும் எடுத்துக் காட்டியுள்ளது.

சென்னையில் 1 வாரத்திற்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னையில் 1 வாரத்திற்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை!

இதனையடுத்து தற்போது நார்வே நாட்டின் தனியார் வானிலை ஆய்வு மையம் ஒன்று சென்னையில் இன்று முதல் 30ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

நார்வே நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் செயலி ஒன்றின் மூலம் வெளிவந்த இந்தத் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2015ஆம் ஆண்டு சென்னையில் அதீத கனமழை பெய்து ஒரே நாள் இரவில் சென்னை நகரமே தண்ணீரில் மிதந்தது. எனவே வரும் 30ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories