தமிழ்நாடு

“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் இன்று (06.11.2025) தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில், நடைபெற்ற ‘’கூட்டுறவு கீதம்’’ வெளியீட்டு விழாவில் ‘’கூட்டுறவு கீதம்’’-ஐ வெளியிட்டார்கள்.

“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
Anbu
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் இன்று (06.11.2025) தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில், நடைபெற்ற ‘’கூட்டுறவு கீதம்’’ வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விவாழ்வில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், முதல்முறையாக கூட்டுறவுக்காகவே இயற்றப்பட்டுள்ள ”கூட்டுறவு கீதம்”-ஐ வெளியிட்டார்கள். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலையாய திட்டமான “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” நூலினை வெளியிட்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள LED விளம்பர பலகையினை திறந்து வைத்தார்கள்.

பின்னர், கூட்டுறவு ஒன்றியங்கள் மூலமாக நடத்தப்படும் உறுப்பினர் விழிப்புணர்வு முகாம், இளைஞர் ஈர்ப்பு முகாம் மற்றும் கூட்டுறவு சேவைகள் குறித்து பொது மக்களிடம் எடுத்து செல்ல அனைத்து மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களுக்கு ரூ.29,76,108/- மதிப்பீட்டில் உறுப்பினர் கல்வித் திட்ட சாதனங்கள் வழங்கப்பட்து. மேலும், கருணை அடிப்படையில் 6 நபர்களுக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்து.

இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெருகருப்பன் பேசும் போது தெரிவிக்கையில் :-

“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
Anbu

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீறிய தலைமையிலான தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் கூட்டுறவுத்துறை, அனைத்து துறைகளுடன் இணைந்து  செயல்படும் துறையாகவும், அனைத்து துறைகளை மக்களுடன் இணைக்கும் துறையாகவும் செயல்பட்டு வருகிறது.

கூட்டுறவின் மாண்பினையும், கூட்டுறவின் செயல்பாடுகளையும், கூட்டுறவும் மகத்துவத்தையும் விளக்கும் வகையில் இன்றைய தினம் ”கூட்டுறவு கீதம்” உருவக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கீதம் எவ்வாறு நட்டின் பெருமைகளை விளக்குகின்றதோ, அதேபோன்று ”கூட்டுறவு கீதம்” முதல்முறையாக கூட்டுறவுக்காகவே இயற்றப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கூட்டுறவுத் துறைக்கு என்று “கூட்டுறவு கீதம்” இயற்றப்பட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் என்ற முறையில் என்னால் வெளியிடப்பட்டது எண்ணி பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இனிவரும் காலங்களில் கூட்டுறவுத்துறையின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ”கூட்டுறவு கீதம்” பயன்படுத்தப்படும்.
”கூட்டுறவு கீதம்” கூட்டுறவுத்துறையின் ஒரு அங்கமாக என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

“கூட்டுறவு கீதம்” உருவாக்க உறுதுணையாக இருந்த, கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கும், கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்களுக்கும், சிறந்த கூட்டுறவு கீதம் பாடலை தேர்வு செய்த குழு தலைவர்  தமிழ்கடல் தேவகோட்டை இராமநாமன் அவர்களுக்கும், கூட்டுறவு கீதத்தை எழுதியவர்
திரு.ஆனந்த செல்வன் அவர்களுக்கும், கூட்டுறவு கீதத்திற்கு இசை அமைத்து இன்றைய தினம் அழகாக இங்கு இசைத்த திரைப்பட இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் இசைக்குழுவினருக்கும், இதற்காக பாடுபட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும், எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories