தமிழ்நாடு

தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆந்திர கடற்பகுதியில் காக்கிநாடாவுக்கு அருகில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இது அடுத்த இரண்டு நாட்கள் வடமேற்கு திசையில் நகருவதால் தமிழகத்தின் வடமாவட்டங்களான வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடு என்றும், அதேபோல் காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை நகரின் சில பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி ஆந்திர கடற்கரை பகுதியில் 45-55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories