தமிழ்நாடு

அரசு நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு மதுபானம் விற்பனை : மது கூட கட்டிட உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

அரசு நிர்ணயித்த தொகையை விட டாஸ்மாக் கடைகளில் அதிகப்படியான விலைக்கு மதுபானம் விற்பதாக தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அரசு நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு மதுபானம் விற்பனை : மது கூட கட்டிட உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரசு நிர்ணயித்த விலையை விட டாஸ்மாக் கடைகளில் அதிகப்படியான விலைக்கு மதுபானம் விற்பதாக தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் மது கூட ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பு செல்வன் கூறுகையில், “தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் மது கூட ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில், கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆறு மாத காலமாக பொதுக் கூட்டத்தின் வாயிலாக வர வேண்டிய இட வாடகை வராமல் உள்ளது.

அரசு நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு மதுபானம் விற்பனை : மது கூட கட்டிட உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

மது பிரியர்கள் வருகையும் குறைந்துள்ளதால் இதற்கு மேலும் மது கடைகளை கட்டிட உரிமையாளர்கள் நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசித்து வருகின்றனர். அதேபோல் தமிழகம் முழுவதும் அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூபாய் 20 முதல் 40 வரை மது கடையிலேயே விற்கப்படுவதால் கடை வாயிலில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories