தமிழ்நாடு

“மோடி அரசின் பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு” : ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா? - போலிஸ் விசாரணை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேரை சி.பி.சி.ஐ.டி போலிஸார் கைது செய்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலிஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சி.பி.சிஐ.டி போலிஸார், உளுத்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணப்பன், ஏழுமலை, வீரன், மணிமேகலை ஆகிய நான்கு ஒப்பந்த ஊழியர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை மற்றும் சங்கராபுரம் பகுதியில் அதிக அளவில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்ததாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரை அடுத்து இரண்டு தனியார் கணினி மையத்திற்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் வருவாய் வட்டாச்சியர் சிவச்சந்திரன் மற்றும் வேளாண் அதிகாரி ராஜா சில தினங்களுக்கு முன்பு சீல் வைத்தனர்.

“மோடி அரசின் பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு” : ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா? - போலிஸ் விசாரணை!

முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் அமுதா ரிஷிவந்தியம் வேளாண்மை அதிகாரி ரவிச்சந்திரன் உள்பட 30 நபர்களை திட்ட முறைகேடு தொடர்பாக சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் இத்திட்டத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட பணம் ரூபாய் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முறைகேட்டை முழுமையாக விசாரித்தால் ஆளும் கட்சி பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவரலாம் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories