தமிழ்நாடு

#CORONAUPDATES : இன்று ஒரே நாளில் 116 பேர் கொரோனாவுக்கு பலி.. தமிழகத்தில் 5,986 பேருக்கு புதிதாக தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

#CORONAUPDATES : இன்று ஒரே நாளில் 116 பேர் கொரோனாவுக்கு பலி.. தமிழகத்தில் 5,986 பேருக்கு புதிதாக தொற்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 75,076 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 39.88 லட்சத்தை கடந்துள்ளது. சென்னையில் இன்று 1,177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 1,21,450 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் இன்று மட்டும் 5,742 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை3,01,913 ஆக உள்ளது. தற்போது 53,283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 116 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி 6,239 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories