தமிழ்நாடு

விடுதலை நாளேட்டை குறிப்பிட்டு பெரியார் பற்றி அவதூறு பரப்பிய சங்கிகள் - இந்து முன்னணி, பா.ஜ.கவினர் கைது!

பெரியார் குறித்து அவதூறாகப் பதிவிட்ட பட்டுக்கோட்டை பா.ஜ.க உறுப்பினர்  தியாகராஜன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.

விடுதலை நாளேட்டை குறிப்பிட்டு பெரியார் பற்றி அவதூறு பரப்பிய சங்கிகள் - இந்து முன்னணி, பா.ஜ.கவினர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வட மாநிலங்களில் மதவாதத்தால் பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு ஆட்சியில் அமர்ந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதனால் தென் இந்தியாவில் கர்நாடகா நீங்கலாக மற்ற மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் தங்களால் காலூன்ற முடியவில்லையே என்ற விரக்தியில் திராவிட வழியில் நின்ற பெரியார் முதற்கொண்டு அனைவரையும் இழிவாகப் பேசி வருகின்றனர் பா.ஜ.கவினர்.

பா.ஜ.வினர் பரப்பும் பொய்களையும் வதந்திகளையும் ஆராயாமல் அதனை பகுத்தறிந்து புரிந்துகொள்ளாமல் அக்கட்சியைச் சேர்ந்தவர்களும் அந்த வதந்திகளை அயர்ச்சியில்லாமல் பரப்பி வருகின்றனர்.

அந்தவகையில், “தாயிடமும் மகளிடமும் காமத்தை தீர்த்துக்கொள்ளலாம்” 11.05.1953 விடுதலை நாளிதழில் மேற்கண்ட செய்தி இருப்பதாகவும் அதனை தந்தை பெரியார் சொன்னதாகவும், சங்கிகள் உருவாக்கிய அவதூறு பதிவு திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, பட்டுக்கோட்டை திராவிடர் விடுதலைக் கழகத்தினர் காவல் ஆய்வாளரிடம் 11.05.1953 இல் வெளிவந்த விடுதலை இதழின் நகலையும் இணைத்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்திருந்தனர்.

அதன்படி, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பா.ஜக உறுப்பினர் தியாகராஜன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல, திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இந்து முன்னணி உறுப்பினர் சிவாஜியும் கடந்த 2 நாட்களுக்கு பெரியார் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டார்.

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் எவரும் செயல்படக்கூடாது என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி தன் கட்சி உறுப்பினர்களுக்கும் அதனைச் சார்ந்த அமைப்புகளுக்கும் விலக்களித்துவிட்டாரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories