தமிழ்நாடு

பெரியார் நீர்வீழ்ச்சி பெயர்ப் பலகையில் ‘பெரியார் பெயர் மீது காவிசாயம் பூச்சு’: தி.மு.க எம்.எல்.ஏ கண்டனம்!

பெரியார் நீர்வீழ்ச்சி பெயர்ப் பலகைக்கு மர்ம நபர்கள் நேற்று காவிச்சாயம் அடித்த காட்டுமிராண்டிகளுக்கு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் நீர்வீழ்ச்சி பெயர்ப் பலகையில் ‘பெரியார் பெயர் மீது காவிசாயம் பூச்சு’: தி.மு.க எம்.எல்.ஏ கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர் வீழ்ச்சியின் பெயர் பலகைக்கு காவிச் சாயம் பூசியது காட்டுமிராண்டித்தனமானது என ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம்- வெள்ளிமலை செல்லும் மலைப்பாதையில் குண்டியாநத்தம் அருகில் இயற்கை எழிலோடு மழைக்காலத்தில் விழும் நீர்வீழ்ச்சியான பெரியார் நீர்வீழ்ச்சியின் பெயர் பலகைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று காவிச் சாயம் பூசியுள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழினமும் மானமும் அறிவும் பெற, சுயமரியாதையுடன், வாழ்ந்திட ஓய்வறியாமல் தன் இறுதிமூச்சு வரை போராடிய அறிவுச் சூரியன் தென்கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ் தந்தை பெரியார் அவர்களின் சிலைகளின் மீது காவிச் சாயம் பூசுதல், செருப்பு மாலை, அணிவித்தல் போன்றவை தமிழகத்தில் ஓரிரண்டு இடங்களில் நடைபெற்றுள்ள நிலையில் கடந்த 1971-76 ம் ஆண்டு கழக ஆட்சியில் பெரியார் நீர்வீழ்ச்சி என பெயர் சூட்டப்பட்ட நீர்வீழ்ச்சியின் பெயர் பலகையில் உள்ள பெரியார் எனும் எழுத்துக்களின் மீது காவிச்சாயம் பூசப்பட்டுள்ளது.

பெரியார் நீர்வீழ்ச்சி பெயர்ப் பலகையில் ‘பெரியார் பெயர் மீது காவிசாயம் பூச்சு’: தி.மு.க எம்.எல்.ஏ கண்டனம்!

அத்தைகைய கொடுஞ்செயல் நமது மாவட்டமான கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கதக்கது.

தந்தைபெரியார் 21-ம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர், அவரது வாழ்வும் போரட்டமும், பேச்சும், எழுத்தும், உழைப்பும் மிகவும் பின்தங்கியிருந்த சமூக சூழலை மாற்றி அனைவருக்குமான கல்வி, சமத்துவம், உரிமை, சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூகவியல் மற்றும் அரசியல் களங்களில் மட்டுமல்லாமல்... இடஒதுக்கீடு, சமூகநீதி சாதி, தீண்டாமை மூடநம்பிக்கை, சடங்கு, பெண் உரிமை, மறுமணம், அரசியல் உரிமை தமிழ், தமிழ்நாட்டின் உரிமை ஆகியவற்றில் பெரியாரின் சிந்தனைகளோடு இன்றைய இளைய சமுதாயம் உடன்பாட்டுடன் தொடர்வதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பக்தர்களாக, சமூக பிற்போக்குதனமுடையவராக உள்ள தமிழர்கள் கூட பெரும்பாண்மையோர் பெரியாரின் ஒருசில நிலைப்பாட்டிலாவது ஒண்றிணைவதை நாம் காணமுடியும்.

பெரியார் நீர்வீழ்ச்சி பெயர்ப் பலகையில் ‘பெரியார் பெயர் மீது காவிசாயம் பூச்சு’: தி.மு.க எம்.எல்.ஏ கண்டனம்!

அரசியல் களத்தில் தமிழ்நாட்டில் எப்போதும் காலூன்ற முடியாத ஆரிய கூட்டத்தின் தவறான முயற்சிகளால் தமிழகத்தில் இயல்பாய் எழும் எதிர்ப்புகள்தான் பெரியார் விளைவு அதனால்தான் வடஇந்தியம் யாரை முன்னிருத்தி எத்தைகைய வேடமிட்டு வந்தாலும் அவர்களின் செல்வாக்கை தமிழகமக்கள் செல்லாக்காசாக்கி விடுகின்றனர்.

அதையெட்டியே அண்மைகாலத்தில் இதுபோன்ற, சமூகத்திற்குத் தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் நடைபெறுகிறது. அச்செயல்கள் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

அது மட்டுமல்ல மாபெரும் போராட்டங்களை நடத்தி உரிமைகளை பெற்றுத் தந்து சமுதாய மாற்றங்களை கொண்டுவந்த தலைவர்களின் கொள்கைகளை, கருத்தை ஏற்றுக்கொள்வதும் கடைபிடிப்பதும் அல்லது மறுப்பதும் அவரர் உரிமை யாகும் அதைவிடுத்து கருத்தை கருத்தால் எதிர்க்க திராணியற்று தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது என்பது மனித நாகரிகத்திற்கு மாறான செயலாகும்.

பெரியார் நீர்வீழ்ச்சி பெயர்ப் பலகையில் ‘பெரியார் பெயர் மீது காவிசாயம் பூச்சு’: தி.மு.க எம்.எல்.ஏ கண்டனம்!

மதத்தால், சாதியால் தமிழர்கள் வேறுபடாமல், தமிழர்கள் என்கிற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கவும் அதன்மூலம் தங்களது தமிழ்மொழி, தமிழின எதிர்ப்பு அரசியல் பிழைப்பிற்கும். சில தீய சக்திகள் திட்டமிடுவதை ஒருபோதும் தமிழினம் ஏற்காது என்பதையும்,

நமது மண்ணில், சமூக ஒற்றுமையும் அமைதியையும் சீர்குலைக்கும் விதமாக தந்தைபெரியாருக்கு அவமரியாதையை ஏற்படுத்திட நினைத்து பெயர் பலகையில் காவிச் சாயம் பூசிய விஷமிகளை விரைந்து கண்டுபிடிப்பதுடன் அவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் காவித் தீவிரவாதிகளையும் அடையாளம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் நிறுத்தி அவர்களைத் தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறை உயர் அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories