தமிழ்நாடு

“வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு; 40 டிகிரிக்கு மேல் வெயிலும் கொளுத்தும்” : வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

“வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு; 40 டிகிரிக்கு மேல் வெயிலும் கொளுத்தும்” : வானிலை ஆய்வு மையம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

வளிமண்டல மேலடுக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழை மட்டுமே இருக்கும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் குறிப்பாக கரூர், திருச்சி, சேலம், திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஆக 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் காணப்படும். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 11 மணி முதல் 3.30 மணிவரை வெளியில் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.

சென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மற்ற நேரங்களில் தெளிவாகவும் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸும் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகர்கோவில் ஏரணியல் ஏழு சென்டிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

banner

Related Stories

Related Stories