தமிழ்நாடு

10% இட ஒதுக்கீடு : தி.மு.க கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

முன்னேறிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் பற்றிப் பேச நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 10% இட ஒதுக்கீடு : தி.மு.க கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் விவகாரம் பற்றிப் பேச நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கு எதிரான இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்ததோடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தில், 69% இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை உயர்த்திக்கொள்ளலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள கவர்ச்சியை நம்பி தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது என அவர் தெரிவிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்கள்.

அதன்படி, முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் பற்றிப் பேச நாளை மறுநாள் (08/07/2019) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

banner

Related Stories

Related Stories