தமிழ்நாடு

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணமும் தபால் ஓட்டும்  பறிமுதல் 

சோதனையை அமமுக கட்சியினர் தடுத்ததால் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணமும் தபால் ஓட்டும்  பறிமுதல் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகம் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடந்தது.

ஆனால் சோதனை நடத்த அமமுக கட்சியினர் அனுமதிக்காமல் தடுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணமும் தபால் ஓட்டும்  பறிமுதல் 

பின்னர் நடந்த சோதனையில் 94 பண்டல்களில் இருந்து 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த பண்டல்களில் பாக எண், வாக்காளர் பெயர் போன்ற தகவல் எழுதப்பட்டிருந்திருக்கிறது. மேலும், அமமுக சின்னத்துக்கு வாக்களித்த தபால் ஓட்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories