
2026 ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றி அதிரடி காட்டியுள்ளது ஆர்சிபி அணி. தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக கோப்பையை கைப்பற்றியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது ஆர்சிபி அணி.
ஐபிஎல் வரலாற்றில் எம்.எஸ் தோனி (CSK), ரோகித் சர்மா (MI) வரிசையில் அடுத்தடுத்து இரண்டு முறை கோப்பை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றார் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார்!
தோனி சென்னை அணிக்காக 2010, 2011 ஆண்டுகளிலும், ரோகித் சர்மா மும்பை அணிக்காக 2019, 2020 ஆண்டுகளிலும் கோப்பை வென்றிருந்த நிலையில் 2025, 2026 ஆண்டுகளில் ஆர்சிபி-க்காக கோப்பை வென்றுள்ளார் ரஜத் பட்டிதார்.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது முதல் 17 ஆண்டுகள் கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வந்தது பெங்களூரு அணி. ஆடும் லெவனில் விராட் கோலி, கெயில், டிவில்லியர்ஸ் என உலகின் சிறந்த வீரர்களை கொண்டிருந்தபோதும் அந்த அணியால் கோப்பை வெல்ல முடியாமல் இருந்தது.
கோப்பை வெல்லாத ஜோக்கர்ஸ் அணி என்ற கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி வந்தது ஆர்சிபி. கேப்டனாக இருந்த விராட் கோலியும் பல அவமானங்களை சந்தித்தார். லீக் போட்டிகள் வரை சிறப்பாக விளையாடும் ஆர்சிபி அணி பிளே ஆஃப் அல்லது இறுதிப் போட்டியில் தோற்று வெளியேறிவிடும்.
பல அவமானங்களை கடந்து வந்த ஆர்சிபி அணி 2025-ல் ரஜத் பட்டிதார் தலைமையில் தனது முதல் கோப்பையை வென்று ரசிகர்கள் நெஞ்சில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. 2025ம் ஆண்டைத் தொடர்ந்து இந்த முறையும் லீக், பிளே ஆஃப், இறுதிப்போட்டி என எல்லாவற்றிலும் சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாக கோப்பை வென்றது ஆர்சிபி.

2024 - ஸ்மிரிதி மந்தனா தலைமையில் மகளிர் ப்ரீமியர் லீக் (WPL)
2025 - ரஜத் பட்டிதார் தலைமையில் ஐபிஎல் கோப்பை (IPL)
2026 - ஸ்மிரிதி மந்தனா தலைமையில் மகளிர் ப்ரீமியர் லீக் (WPL)
2026 - ரஜத் பட்டிதார் தலைமையில் ஐபிஎல் கோப்பை (IPL)
கடந்த 2 ஆண்டுகளில் வுமன்ஸ் ப்ரீமியர் லீக் எனப்படும் WPL தொடர் மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக்-கான IPL என இரு தொடர்களிலும் சேர்ந்து 4 கோப்பைகளை வென்றுள்ளது ஆர்சிபி அணி.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் 42 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் பெங்களூரு வீரர் விராட் கோலி.
2026 ஐபிஎல் தொடரில் மட்டும் 675 ரன்களை குவித்து விராட் கோலி, இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை (29) கைப்பற்றி பர்பிள் கேப்-ஐ குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ககிசோ ரபாடா வென்றார்.
அதேபோல், தொடரில் அதிக எடுத்த வீரர்கள் பட்டியிலில் 776 ரன்களை அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் சூர்யவன்ஷி இந்த விருதை தட்டிச் சென்றார்.
அதிக பவுண்டரிகள் எடுத்த வீரராக குஜராத் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் சுதர்சன் உள்ளார். மேலும், அதிக அரை சதங்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் 8 அரை சதங்களுடன் சாய் சுதர்சனே இந்தப் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.
அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் நடப்புத் தொடரில் 72 சிக்சர்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் சூர்யவன்ஷி முதலிடத்தில் உள்ளார். மேலும் சிறந்த பேட்டிங் ஸ்டரைக் ரேட் கொண்ட வீரராக 237.30 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இதிலும் சூர்யவன்ஷியே இடம் பிடித்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் மட்டும் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் கே.எல்.ராகுல் இடம் பிடித்துள்ளார். இவர் அதிகபட்சமாக 67 பந்துகளில் 152 ரன்கள் குவித்தார்.

நடப்புத் தொடரில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2 சதங்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் உள்ளார்.
சிறந்த பவுலிங்காக லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி வீரர் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
சிறந்த பவுலிங் எகானமி கொண்ட வீரராக 6.65 எகானமியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.
இப்படி ஒரு தொடரில் சிறந்த பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.






