விளையாட்டு

நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !

உலகக்கோப்பையை வென்ற மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா கால்பந்து அரங்கில் உலகளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிரிக்கெட்டுக்கு இணையாக கால்பந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும்ம், கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட்டை விட அதிகம் வரவேற்பு பெரும் விளையாட்டாக கால்பந்து இருக்கிறது என்று சொன்னாலும் அது தவறில்லை.

கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில், போர்த்துக்கல் ஆகிய அணிகளுக்கு அதிகளவில் கால்பந்து ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கதாநாயர்களாக கொண்டாடட்பட்டு வருகிறார்கள். கடந்த உலககோப்பையை அர்ஜென்டினா அணி வென்றபோது அது கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !

உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு கேரள ரசிகர்கள் அளித்த ஆதரவு அர்ஜென்டினா வரை எட்டியது. அதைத் தொடர்ந்து இதற்கு நன்றி செலுத்தும் விதமாக மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வரும் என தகவல் வெளியானது.

கேரளாவுக்கு நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட வருமாறு அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தை கேரள அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்ற மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

முன்னதாக அர்ஜென்டினா அணியின் கேரள பயணம் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், தற்போது அர்ஜென்டினா அணி இந்தியாவுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தலைமையிலான உலக சாம்பியன் அணி வரும் நவம்பர் மாதம் கேரளாவுக்கு வரவுள்ளது.

banner

Related Stories

Related Stories