இந்தியா

2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !

இந்தியாவுக்கு சொந்தமான விண்வெளி ஆய்வு மையம் 2035 ஆம் ஆண்டு அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இரண்டாவது விண்வெளி தினம் டெல்லியில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை இஸ்ரோ தலைவர் நாராயணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த சில மாதங்களில் 6500 கிலோ எடைகொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் அனுப்பப்பட இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சந்திராயன் திட்டம் 4, வீனஸ் மிஷன் திட்டம் ஆகியவை அடுத்து சாதியப்பட உள்ளதாகவும், இன்று 80,000 கிலோ கொண்ட செயற்கை கோளை அனுப்பும் திறன்கொண்ட ராக்கெட் இஸ்ரோ தயாரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !

தொடர்ந்து பேசிய அவர், இந்த ராக்கெட் உயரம் 40 மாடி அளவுக்கு உள்ளது என்றும், இது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று தெரிவித்தார். அதோடு இந்தியாவின் விண்வெளி மையம் 2035 ஆம் ஆண்டு செயல்படுவத்துக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த விண்வெளி மையத்துக்கான முதல் கட்ட கருவிகளை 2028 ஆம் ஆண்டு அனுப்ப உள்ளதாகவும், நிலவில் தரையிறங்கும் திட்டம் 2040 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும், மனிதனை நிலவுக்கு அனுப்பி திரும்ப அழைத்துவரும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories