விளையாட்டு

வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா அணி : 27 ஆண்டுகளில் முதல் முறையாக ICC கோப்பை வென்று சாதனை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வென்று தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்துள்ளது.

வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா அணி : 27 ஆண்டுகளில் முதல் முறையாக ICC கோப்பை வென்று சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்கா அணியும் விளையாடின. புகழ்பெற்ற லண்டன் லார்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பின்னர், முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழுந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்மித் 66 ரன்கள் எடுத்து இருந்தார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 138 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. ஆஸ்திரேலியே பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர்களை தினர செய்தார்.

இதற்கு அடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 207 ரன்களிலேயே ஆல் அவுட் ஆனது. இதில் மிட்செல் ஸ்டார்க் அடித்த 58 ரன்களே அதிகம். பின்னர் 282 வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரக்கா களம் இறங்கியது.

முதல் இன்னிங்சை பார்த்தபோது இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியா வெற்று பெற்றுவிடும் என பலரும் நினைத்துக் கொண்டு இருந்தபோது, தென் ஆப்பிரிக்கா வீரர் மார்க்ரம், பவுமாவின் நிதிதான மற்றும் அதிர ஆட்டம் எல்லோரின் எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கியது. மேலும் சதம் அடித்து தென் ஆப்பிரிக்காவின் கனவை உறுதி செய்தார் மார்க்ரம். அவருக்கு துணையாகவும், கேப்டனாகவும் பவுமா துணைநின்றார்.

பின்னர், 4 விக்கெட்டுகள் இழுந்து 282 ரன்களை எளிதாக கடந்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக ஐஐசி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஸ்மித் தலைமையிலான தென் ஆப்ரிக்க் அணி 1998 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றிருந்தது. கால்நூற்றாண்டுக்கு பிறகு தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories