விளையாட்டு

உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றார் தமிழ்நாட்டு வீரர் குகேஷ்! : “கனவு நினைவானது” என குகேஷ் நெகிழ்ச்சி!

14 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகளுடன் குகேஷ் முன்னிலை வகித்து, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றார் தமிழ்நாட்டு வீரர் குகேஷ்! : “கனவு நினைவானது” என குகேஷ் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உலக அளவிலான செஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இந்திய வீரர்கள் இருந்து வருகின்றனர். எனினும், விஸ்வநாத ஆனந்திற்கு அடுத்து இந்தியாவைச் சேர்ந்தவர் ஒருவர் உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்வது என்பது மட்டும் நீண்டகால காத்திருப்பாக இருந்தது.

இந்நிலையில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் 14 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகளுடன் குகேஷ் முன்னிலை வகித்து, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளார்.

இதனால், உலக செஸ் சாம்பியன் ஆன இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குகேஷ். இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த குகேஷ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் என்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றார் தமிழ்நாட்டு வீரர் குகேஷ்! : “கனவு நினைவானது” என குகேஷ் நெகிழ்ச்சி!

இதற்கு முன்னதாக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாத ஆனந்த் அவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான் என்பதால், உலக அரங்கில் தமிழ்நாட்டு வீரர்கள் புகழ் மேலோங்கியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்ம் “உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட தீவிர பயிற்சிக்கு பின் கிடைத்த வெற்றி இது.

11 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிடமிருந்து பறிக்கப்பட்ட சாம்பியன் பட்டத்தை தற்போது திரும்பப் பெற்றுள்ளது மகிழ்ச்சி. ஒவ்வொரு செஸ் வீரருக்கும் இருக்கும் கனவுதான் இன்று எனக்கு நினைவாகி உள்ளது. என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்” என தெரிவித்தார்.

இது குறித்து முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வாநாதன் ஆனந்த், “உலக செஸ் சாமியன்ஷிப் தொடரில் குகேஷ் வென்றது மகிழ்ச்சி. முழு முயற்சியுடன் பயமில்லாமல் விளையாடி குகேஷ் வென்றுள்ளார்” என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories