தமிழ்நாடு

”ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்” : துணை முதமைச்சர் உதயநிதி!

ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டத்திற்கு துணை முதமைச்சர் உதயநிதி எதிர்ப்பு தெரிவிதுள்ளார்.

”ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்” : துணை முதமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்புகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு, ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவிற்கு காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களை அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் வழங்கியது. இந்நிலையில் இந்த ஆய்வு குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என துணை முதலமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் சர்வாதிகாரத்திற்கு களம் அமைக்கும் சதித்திட்டம் இது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்கிற தந்திரமும் இதில் உள்ளது.

இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கடைசியில் மாநிலங்களையே ஒழிக்க தான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும். பேராபத்தான இத்திட்டத்தை நமது கழகத் தலைவர் - முதலமைச்சர் அவர்களின் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! மாநிலங்களைக் காப்போம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories